01:1 சுற்றுலா விடுதியை ஒதுக்கிக் கொள்வதற்குரிய தினத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் தலைமை அலுவலகத்தின் நிருவாக அலுவலரை உசாவியதன் பின்னர் உரிய விண்ணப்ப்படிவத்தை பூரத்திசெய்து சமர்பித்து உரிய முழுக் கட்டணத்தையும் பணமாக செலுத்தி விடுதியை உரிய நபருக்கு குறித்தொதுக்கிக் கொள்ள முடியும். நிருவாக அலுவலரின் தொலைபேசி இலக்கம் வருமாறு
011-286441-3 (பொது அலுவலகம்) – நீட்சி – 112
0602083371 (கடமை)
0718616945 (கையடக்க)
01:2 சுற்றுலா விடுதியை குறித்து ஒதுக்கிக் கொள்வதற்காக நீங்கள் பணம் செலுத்திய பற்றுச் சீட்டின் நிழற் பிரதியொன்றை இணைப்பு 01 க்கு அமைய விண்ணப்பத்தோடு இணைத்து சமர்ப்பிக்க வேண்டுமென்பதோடு, அவ்விண்ணப்பத்தை தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து கையளிப்பதன் மூலம் அல்லது 0112868450 என்ற தொலைநகல் இலக்கத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அதனை கையளிக்க முடியும்.
01:3 தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் நிருவாக அலுவலருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது, உங்களுக்கு சுற்றுலா விடுதியை உரிய தினத்தில் குறித்தொதுக்கிக் கொள்வதற்கு வசதியாக அமையும்.
01:4 உங்கள் விண்ணப்பத்திற்கமைய கோரப்பட்ட தினம்/ தினங்களுக்காக சுற்றுலா விடுதியில் தங்குவதற்கு அனுமதியளிக்கும் கடிதத்தின் உங்கள் பிரதியை நிருவாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதோடு அதனைச் சுற்றுலா விடுதியின் பொறுப்பாளர் திரு. ஆர்..ஜீ.ஆர்.எம். பண்டார அவர்களிடம் கையளித்து குறித்த தினங்களுக்காக தங்குமிட வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
01:5 சுற்றுலா விடுதியில் தங்குவதற்கான நாளைக் குறித்தொதுக்கும்போது, தேர்தல் ஆணைக்குழுவின் கடமை புரியும் ஊழியர்களுக்கு ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.
01:6 தங்குவதற்காகத் தேவைப்படும் தலையணை, கட்டில் விரிப்பு, போர்வை ஆகியவையும், உணவு தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கேஸ் அடுப்பு, குளிரூட்டி ஆகிய உபகரணங்களும் வழங்கப்படும்.
அறைகளின் எண்ணிக்கை – 02
அறைகளில் தங்கக்கூடிய ஆகக் கூடிய எண்ணிக்கை – 03
தேர்தல்கள் திணைக்களத்தின் ஊழியர்களுக்கான வாடகை (01 நாளைக்கு – 1,000.00 ரூபா
அரச/ பகுதியளவு அரச ஊழியர்கள் – 2,000.00 ரூபா
வேறு (வெளித்தரப்பினர்) – 5,000.00 ரூபா
சுற்றுலா விடுதிப் பொறுப்பாளரின் பெயர் – திரு. ஆர்.ஜீ.ஆர்.எம். பண்டார
02:1 கட்டில், தலையணை, கட்டில் விரிப்பு, தலையணையுறை மற்றும் போர்வை (Blanket) என்பன வழங்கப்படும். இவற்றை சுத்தம் செய்யும் கட்டணம் சுற்றுலா விடுதிக் கட்டணத்தில் உள்ளடக்கப்படவில்லை ஆதலால் சுத்தம் செய்யும் கட்டணமாக பயன்படுத்திய பொருட்களுக்காக ஒரு அறைக்கு 200.00 ரூபா தொகையை சுற்றுலா விடுதி பொறுப்பாளரிடம் கொடுப்பனவு செய்தல் வேண்டும்.
02:2 இச் சுற்றுலா விடுதியில் தங்கும் வரை தமக்குரிய உணவு மற்றும் பானங்களை தயாரித்துக் கொள்வதற்கு தேவையான சமையலறை உபகரணங்கள், குளிரூட்டி, கேஸ் அடுப்பு உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்கப்படுமென்பதோடு, அதற்காக எரிபொருள் மற்றும் மின்சாரம் என்பவற்றிற்காக ஒரு நாளைக்கு 200.00 ரூபா தொகையை சுற்றுலா விடுதிப் பொறுப்பாளரிடம் கொடுப்பனவு செய்தல் வேண்டும்.
02:3 தலைமை அலுவலகம் உள்ளிட்ட தீவின் எந்தவொரு தேர்தல்கள் அலுவலகங்களிலும் பணத்தைச் செலுத்த முடியும்.
02:4 இந்த ஆணைக்குழுவின் அல்லது அரசாங்கத்தின் தேவைகளுக்காக அல்லது அவசர நிலைமைகளின் கீழ் இவ்வொதுக்கீடு இரத்துச் செய்யப்படின் குறித்தொதுக்கிக்கொள்வதற்காக அறவிடப்பட்ட கட்டணம் மீளளிக்கப்படும்.
03:1 சுற்றுலா விடுதியில் தங்குவதற்காக அனுமதிப் பத்திரம் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ளப்படாத அப்படிவத்தில் பெயர் குறிப்பிடப்படாத எந்தவொரு நபரையும் சுற்றுலா விடுதியில் தங்குவதற்காக அழைத்து வருதல் கூடாது. ஓர் அறையில் அதிகபட்சமாக மூவர் மாத்திரம் தங்கமுடியும்.
03:2 ஒதுக்கீடு செய்துக் கொண்ட சுற்றுலா விடுதியை பயன்படுத்தவில்லையெனில், அது தொடர்பாக ஒதுக்கீடு செய்து கொண்ட நபர் ஒதுக்கீடு செய்து கொண்ட தினத்திற்கு 7 தினங்களுக்கு முன்னர் தேர்தல்கள் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். அது தொடர்பாக எந்தவொரு காரணத்திற்காகவும் பணம் மீள வழங்கப்பட மாட்டாதென்பதோடு, தவிர்க்க முடியாத காரணமொன்றினால் ஒதுக்கிக் கொண்ட சுற்றுலா விடுதியைப் பயன்படுத்தவில்லையெனில் மாத்திரம் அத்தினத்திற்காக அல்லது காலத்திற்காக குறித்த வருடம் முடிவடைவதற்குள் வசதியான வேறோரு தினமொன்றை அல்லது உரிய காலத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்காகச் தேர்தல்கள் பணிப்பாளர் நாயகத்திற்குக் கோரிக்கை முன் வைக்கப்படுமாயின் அது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும்.
03:3 சுற்றுலா விடுதியை குறித்தொதுக்கிக் கொண்டவர்கள் உத்தியோக பூர்வமாக சுற்றுலா விடுதியில் தங்கியிருப்பதற்கு அனுமதி பெற்றுள்ள காலப்பகுதியினுள் அந்த விடுதிக் காணியில் உள்ளவற்றுக்கும், அக்கட்டிடம். கட்டிடத்தினுள் உள்ளவற்றுக்கும்சேதம் ஏற்படாதவாறு பாதுகாப்பாக நடந்து கொள்ளவேண்டும். சுற்றுலா விடுதியில் தங்கியிருக்கின்ற காலப்பகுதியினுள் அக்கட்டிடம் மற்றும் அங்குள்ள உள்ளக மற்றும் வெளியக எவற்றுக்கும் சேதம் விளைவிக்க கூடாது. அவ்வாறு சேதம் ஏற்படின் அவற்றை திருத்தவதற்காக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அவர்கள் அறிவிக்கின்றவாறு செயற்படுவதற்கு விடுதியை ஒதுக்கிக் கொண்டவர்கள் நடவடிக்கையெடுத்தல் வேண்டும்.
03:4 நீங்கள் சுற்றுலா விடுதியில் தங்கியிருக்கும் காலப்பகுதியினுள் உங்களுக்கெதிராக ஏதேனும் முறைப்பாடொன்று கிடைக்குமாயின் எதிர்காலத்தில் இந்த சுற்றுலா விடுதியை ஒதுக்கிக் கொடுத்தல் தொடர்பான விண்ணப்பம் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது.
03:5 சுற்றுலா விடுதியில் தங்குவதற்காக குறித்தொதுக்கும் எவருக்கும் சுற்றுலா விடுதியில் வைபவங்கள் மற்றும் களியாட்டங்களை நடாத்துதல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
03:6 விடுதியில் தங்குவோர் உணவைத் தயாரித்துக் கொள்வதற்காக சமையலறையை உபயோகப்படுத்தவில்லை எனில், தேவையான உணவைப் பெற்றுக் கொள்வதற்காக விடுதிப் பொறுப்பாளருக்கு அறிவித்து வெளியிலிருந்து உணவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்
03:7 விடுதியில் தங்கியிருப்போர் விடுதியின் பொறுப்பாளரிடம் மேலே 02.2 இன் கீழ் செலுத்தப்பட்ட கட்டணங்களுக்கான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.
03:8 சுற்றுலா விடுதியில் குறித்தொதுக்கிக் கொள்வதற்கான விண்ணப்படிவத்தில் மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் கட்டளைகளுக்கு இசைவாக தங்கியிருப்போர் சுற்றுலா விடுதியினுள் ஒழுக்கமாகவும் மரியாதையுடனும் நடந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுவதோடு அரச சொத்தொன்றான இதனைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது அதில் தங்குகின்ற அனைவரதும் பொறுப்பாகும்.