தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் முறைகள்

 

உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் கலப்பு விகிதாசார முறையின் பிரகாரம் நடாத்தப்படுகின்றது.

 

உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்திற்கமைவான முக்கியமான திருத்தச் சட்டங்கள் யாவை ?

1. 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் (திருத்தப்பட்ட) சட்டம்

2. 2016 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் (திருத்தப்பட்ட) சட்டம்

3. 2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் (திருத்தப்பட்ட) சட்டம்

கலப்பு விகிதாசார முறை உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் என்றால் என்ன?

ஏதேனும் ஒரு உள்ளூர் அதிகார சபையில் வட்டார மட்டத்திலும், பொது ஆவணத்தின் மூலமாகவும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படும் முறை கலப்பு விகிதாசார முறையாகும்.  இதன் பிரகாரம் 2017.10.12 ஆந் திகதிய 2017 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க பிரதேச சபைகள் திருத்தப்பட்ட சட்டத்தின் பிரகாரம் இவற்றின் எண்ணிக்கை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதல் வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • வட்டார மட்டத்தில்                         -           60%
  • விகிதாசார அடிப்படையில்       -           40%

உள்ளூர் அதிகார சபை நிருவாகப் பிரதேசத்தில் உள்ள வட்டாரங்கள் மற்றும் வட்டாரங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை ஆகியவை எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது?

சனத்தொகை மற்றும் நிலத்தின் அளவு என்பன தொடர்பாகவும், இன ரீதியான அடிப்படையிலும் குறித்த விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு  தற்போது நாட்டின் சகல உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கும் உரிய வட்டாரங்கள் யாதெனத் தீர்மானித்து எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால்  2015.08.21 ஆந் திகதிய 1928/26 ஆம் இலக்க மற்றும் 2017.02.17 ஆந் திகதிய 2006/44 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அத்தீர்மானங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் உள்ளூர் அதிகார சபைகள் பின்வருமாறு இரண்டு வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  1. ஒருமை வட்டாரம்
  2. பன்மை வட்டாரம்

 

நாட்டின் சகல உள்ளூர் அதிகார சபைகளுக்கும் உரிய வட்டாரங்களினதும், உறுப்பினர்களினதும் எண்ணிக்கை கீழே காட்டப்பட்டுள்ளது.

வட்டாரத்தின் தன்மை

வட்டாரங்களின்

எண்ணிக்கை

உறுப்பினர்களின் 

எண்ணிக்கை

ஒருமை உறுப்பினர் வட்டாரம்

4750

4750

இரண்டு உறுப்பினர் கொண்ட பன்மை வட்டாரம்

165

330

மூன்று உறுப்பினர் கொண்ட பன்மை வட்டாரம்

04

12

மொத்தத் தொகை

4919

5092

 

உள்ளூர் அதிகார சபை நிருவாகப் பிரதேசத்தில் விகிதாசார முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது?

அனைத்து உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கும் தேர்ந்தெடுத்து நியமிக்கப்படவிருக்கும் உறுப்பினர் எண்ணிக்கை நூற்றுக்கு 60 வீதம் எனக் கருத்திற் கொண்டு, எஞ்சிய நூற்றுக்கு 40 வீதம் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கை எனக் கணிப்பிடப்படுகின்றது.  இவ்விரண்டினதும் கூட்டுத்தொகை குறித்த உள்ளூர் அதிகார சபையின் உறுப்பினர் எண்ணிக்கையாகும்.

உதாரணம்-:

A என்னும் பிரதேச சபை

வட்டார அடிப்படையில் நூற்றுக்கு 60 வீதக் கணிப்பீடு

ஒருமை வட்டாரம்              - 14
02 உறுப்பினர்களைக் கொண்ட பன்மை வட்டாரம் - 01
வட்டாரங்களின் கூட்டுத்தொகை - 15
ஒருமை வட்டார அபேட்சகர்கள் - 14
பன்மை வட்டார அபேட்சகர்கள் - 02
அபேட்சகர்களின் எண்ணிக்கை - 16
இதன் பிரகாரம் வட்டார அடிப்படையில் நூற்றுக்கு 60 வீதம் - 16


விகிதாசார அடிப்படையில் நூற்றுக்கு 40 வீதக் கணிப்பீடு

முழு வட்டாரத்திற்கும் வட்டார அடிப்படையிலான அபேட்சகர்களின் எண்ணிக்கை     x     40/60

=      16 x 40/60

=   10.66 ( தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாது) முழு எண்ணிக்கையை கணக்கிடவும்.

அதன் பிரகாரம் விகிதாசார அடிப்படையிலான நூற்றுக்கு 40% =10

இதன் பிரகாரம்  A  என்னும் பிரதேச சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை (16+10) = 26 

 

வேட்புமனுப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது?

அனைத்து அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் இரண்டு படிவங்களில் தமது வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்

வட்டாரங்களுக்கான வேட்புமனுக்கள்

ஒருமை வட்டாரங்களினதும் மற்றும் பன்மை வட்டாரங்களினதும் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு, உள்ளூர் அதிகார சபைக்கு வட்டார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையிலான அபேட்சகர்களின் பெயர்கள் குறித்த வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

விகிதாசார அடிப்படையிலான வேட்புமனுக்கள்

மேலே உதாரணத்தில் கணித்துக் குறிப்பிட்டவாறு நூற்றுக்கு 40 வீதமான எண்ணிக்கையைக் கணித்து அவ்வெண்ணிக்கையுடன் மேலதிகமாக 03 ஐச் சேர்த்து வரும் எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கை கொண்ட  அபேட்சகர்களின் பெயர்கள் குறித்த வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும்

உதாரணம்:-

A என்னும் பிரதேச சபைக்கு விகிதாசார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவூள்ள உறுப்பினர் எண்ணிக்கை 10 ஆக இருந்தால், குறித்த வேட்புமனுவில் (10+3) 13 அபேட்சகர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும்

[/collapse]

 

வேட்புமனுப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் அபேட்சகர்களின் எண்ணிக்கை எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது?

அனைத்து அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் மேற்குறிப்பிட்ட வேட்புமனுப் படிவங்கள் இரண்டிலும் குறித்த பெண் அபேட்சகர்களின் பெயர்களை உள்ளடக்குதல் வேண்டும்.

ஒரு வட்டாரத்திற்கு உரிய வேட்புமனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் அபேட்சகர்களின் எண்ணிக்கையானது, மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் நூற்றுக்கு 10 வீதமாகும்.

உதாரணம்:-  A என்னும் பிரதேச சபைக்கு உரிய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை (16 + 10) = 26 ஆகும்.

                              இதன் பிரகாரம் போட்டியிடும் பெண் அபேட்சகர்களின் எண்ணிக்கை

                               26 X 10/100   = 2.6 ( தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாது) முழு எண்ணிக்கையைக் கணித்தால்

                                                       = 02 ஆகும்

                            

இதன் பிரகாரம் A என்னும் பிரதேச சபைக்கு வட்டார அடிப்படையிலான வேட்புமனுவிற்கு 02 பெண் அபேட்சகர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்.

விகிதாசார அடிப்படையிலான வேட்புமனுவில் நூற்றுக்கு 50 வீதமான பெண் அபேட்சகர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்.

உதாரணம்:-  A என்னும் பிரதேச சபைக்கு உரிய விகிதாசார அடிப்படையிலான அபேட்சகர்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தால்,

            13 X 50/100   = 6.5 (தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாது) முழு எண்ணிக்கையைக் கணித்தால்

                                    = 06 

          இதன் பிரகாரம் A என்னும் பிரதேச சபைக்கு விகிதாசார அடிப்படையிலான வேட்புமனுவிற்கு 06 பெண் அபேட்சகர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்.

 

வேட்புமனுப் பத்திரத்தில் இளைஞர் வேட்பாளர்களை உள்ளடக்குவது தொடர்பான தற்போதைய நிலைமை யாது?

2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் நூற்றுக்கு 25 வீதமான இளைஞர் வேட்பாளர்கள் உள்ளடக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், 2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இந்த எண்ணிக்கை நூற்றுக்கு 30 வீதமாக உயர்த்தப்பட்டது.  எனினும் இது கட்டாயமாக்கப்படவில்லை.

 

உள்ளுர் அதிகார சபைத் தேர்தலில் வேட்பாளர்களாவதற்குரிய தகைமையீனங்கள் யாவை ?

வேட்பாளர்களாவதற்குரிய தகைமையீனங்கள் - (09 ஆம் அத்தியாயம்)

(i) இலங்கைப் பிரஜையாக இல்லாதிருத்தல்
(ii) 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள்
(iii) நீதிமன்ற அலுவலராக இருத்தல்
(iv) ஆயுதந் தாங்கிய இராணுவத்தினராக இருத்தல்
(v) பொலிஸ் உத்தியோகத்தராக இருத்தல்
(vi) 2007 ஜுன் 01 ஆந் திகதிக்குரிய சம்பள அளவுத் திட்டத்தின் ஆரம்பச் சம்பளம் வருடத்திற்கு 2,27,280 ரூபாவுக்குக் (மாதம் 18,940 ரூபா) குறையாத சம்பளம் பெறும் அரச திணைக்களமொன்றில் கடமையாற்றும் அரச அலுவலர் ஒருவர் அல்லது அத்தினத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட பதவியொன்றில் ஆரம்பச் சம்பளத்தில் கடமையாற்றும் அரச அலுவலராக இருத்தல்.
(vii) 2009 ஜனவரி 01 ஆந் திகதிக்குரிய சம்பள அளவுத் திட்டத்தின் ஆரம்பச் சம்பளம் வருடத்திற்கு 2,46,300 ரூபாவிற்குக் (மாதம் 20,525 ரூபா) குறையாத அல்லது அதற்கு சமாந்தரமான ஆரம்பச் சம்பளம் பெறும் அரச கூட்டுத்தாபனமொன்றில் கடமையாற்றும் அலுவலராக இருத்தல்.
(viii) குறித்த உள்ளூராட்சி அதிகார சபையில் கடமையாற்றும் அலுவலர் அல்லது சிற்றூழியர் ஒருவர் உள்ளூர் அதிகார சபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் ஒரு வருட காலத்தினுள் சேவையை முடிவுறுத்தாதிருத்தல்.
(ix) குறித்த உள்ளூர் அதிகார சபைக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ள தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன் குறித்த உள்ளூர் அதிகார சபையில் கடமையாற்றுவதிலிருந்து கேட்டு விலகாமலிருத்தல் மற்றும் அவ்வுள்ளூர் அதிகார சபைக்குரிய நிருவாகப் பிரதேசத்தில் வெளிக்கள அலுவலராகத் தொடர்ந்தும் கடமையில் இருத்தல்.
(x) குறித்த உள்ளூர் அதிகார சபைக்காக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், ஒப்புதல்கள் இருப்பின் அல்லது குறித்த உள்ளூர் அதிகார சபையிலிருந்து ஏதேனும் கமிஷன் கொடுப்பனவுகள்  பெற்றுக் கொள்பவராக இருத்தல் (ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை போன்றவை இதிலடங்காது)
(xi) மனநிலை பாதிக்கப்பட்டவரென சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஒருவராக இருத்தல்
(xii) சொத்துக்களை இழந்தவரென சட்ட ரீதியாக உறுதிப்பட்ட ஒருவராக இருத்தல்
(xiii) 12 மாதங்களுக்கு மேலாக சிறைக் கைதியாக இருத்தலும், தண்டனை வழங்கக்கூடிய குற்றவாளியாக சிறையில் இருப்பவரும்
(xiv) குறித்த கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தேர்தற் குற்றம் புரிந்து தண்டனை பெற்ற ஒருவரது ஐந்து வருடத் தண்டனைக் காலம் முடிவுறாதிருத்தல்
(xv) மக்கள் நிறுவனம் (ஊழல் தவிர்த்தல்) கட்டளைச் சட்டத்தின் 05 பிரிவின் பிரகாரம் பரிசீலனை ஆணைக்குழுவினால் தகுதியற்றவர் எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவராக இருத்தல்
(xvi) குற்றத் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாக சிறைக்கைதியாக இருப்பவர் அல்லது தண்டனை பெற்று ஐந்து வருட காலம் முடிவுறாதிருத்தல்
(xvii) ஒன்றுக்கு மேற்பட்ட வேட்புமனுக்களில் தமது பெயரை அபேட்சகராகக் குறிப்பிடப்பட்டிருத்தல்
(xviii) 1946 ஆம் ஆண்டின் இலங்கை அரச சபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டு, அக்கட்டளைச் சட்ட விதிமுறைகளின் பிரகாரம் தகுதியற்றவர் எனத் தீர்மானிக்கப்பட்டிருத்தல்.
(xix) இலங்கை அரசியல் யாப்பின் 91(1)(எ) அத்தியாயத்தின் பிரகாரம் தகுதியற்றவராக்கப்பட்டிருத்தல்
(xx) மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 277 ஆம் பிரிவு, நகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 184 ஆம் பிரிவு, பிரதேச சபைகள் கட்டளைச் சட்டத்தின் 179 ஆம் பிரிவு ஆகியவற்றின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள விதிகளுக்கமைவாக, குறித்த தினத்தின் பின்னர் விலக்கப்பட்டவர், விலக்கப்பட்ட தினத்திலிருந்து ஐந்து வருட காலம் வரை தகுதியற்றவராகக் கணிக்கப்படும்

 

வைப்புப் பணம் செலுத்துவதற்கான செயன்முறை ஒழுங்குவிதிகள் யாது?

அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியொன்றின் ஒரு வேட்பாளருக்கு 1500 ரூபாவும், சுயேச்சைக் குழுவொன்றின் ஒரு வேட்பாளருக்கு 5000 ரூபாவும் வைப்புச் செய்தல் வேண்டும்

 

அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்படுகின்ற வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவது எவ்வாறு?

அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிக்குரிய வேட்பு மனுவில் கட்சிச் செயலாளரும், சுயேச்சைக் குழுவுக்குரிய வேட்பு மனுவில் குழுத் தலைவரும் கையொப்பமிட்டு வேட்பு மனுவைச் சமர்ப்பிக்காதிருத்தல்

சமர்ப்பிக்கப்படுகின்ற வேட்பு மனுவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிச் செயலாளரது அல்லது சுயேச்சைக் குழுத் தலைவரது கையொப்பத்தினை சமாதான நீதவான் ஒருவரால் முறைப்படி உறுதிப்படுத்தப்படாதிருத்தல்

அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியொன்றின் வேட்பு மனுவை அக்கட்சிச் செயலாளரால் அல்லது அதிகாரம் பெற்ற முகவராலும், சுயேச்சைக் குழுவொன்றின் வேட்பு மனுவை அக்குழுவின் தலைவராலும் கையளிக்காதிருத்தல்,

வேட்பு மனுக்கள் தொடர்பான விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை வேட்பு மனுக்களில் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமலிருத்தல்

வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு உரிய மொத்த வைப்புப் பணமும் செலுத்தப்படாதிருத்தல்,

வேட்பு மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டு உட்படுத்தப்பட வேண்டிய பெண் அபேட்சகர்களின் எண்ணிக்கை வேட்பு மனுவில் பூர்த்தி செய்யப்படாமல் இருத்தல் (2017 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க திருத்தப்பட்ட சட்டத்தின் விதிகளுக்கமைய)

வேட்பு மனுவில் தமது பெயரை அபேட்சகராக உட்படுத்துவதற்கு சகல அபேட்சகர்களும் தமது விருப்பத்தைத் தெரிவித்து கையொப்பமிட வேண்டியுள்ளதுடன், எவரேனும் ஒரு அபேட்சகர் கையொப்பமிடாதவிடத்து, குறித்த அபேட்சகரின் பெயர் மாத்திரம் நிராகரிக்கப்பட்டு வேட்பு மனு  ஏற்றுக்கொள்ளப்படும்

ஒவ்வொரு அபேட்சகரும், அரசியல் யாப்பின் ஏழாம் உப பிரிவிற்கிணங்க, தமது உறுதியுரை இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், எவரேனும் ஒரு அபேட்சகர் அவ்வாறு செய்யத் தவறுமிடத்து, குறித்த அபேட்சகரின் பெயர் மாத்திரம் நிராகரிக்கப்பட்டு வேட்பு மனு  ஏற்றுக்கொள்ளப்படும்

ஒவ்வொரு இளைஞர் அபேட்சகரும் தனது வயதினை உறுதிப்படுத்தும் பொருட்டு தமது பிறப்புச் அத்தாட்சிப் பத்திரத்தின் பிரதியை அல்லது பிறந்த திகதியை உறுதிப்படுத்துகின்ற சத்தியக் கடதாசி ஒன்றின் பிரதியை வேட்பு மனுவுடன் இணைத்திருத்தல் வேண்டும் என்பதுடன்,  எவரேனும் ஒரு அபேட்சகர் அவ்வாறு செய்யத் தவறுமிடத்து, குறித்த அபேட்சகரின் பெயர் மாத்திரம் நிராகரிக்கப்பட்டு வேட்பு மனு  ஏற்றுக்கொள்ளப்படும்

 

வாக்குச் சீட்டின் தோற்றம் எவ்வாறு அமைந்திருக்கும்?

தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் பெயர்களும் சிங்கள மொழி அகராதியின் பிரகாரம் ஒழுங்குபடுத்தப்பட்டு வாக்குச் சீட்டில் மும்மொழிகளிலும் குறிப்பிடப்படுவதுடன், அதற்குக் கீழே தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட இலக்கங்களின் பிரகாரம் சுயேச்சைக் குழுக்களது இலக்கங்களுடன் குறிப்பிடப்படும்.

வாக்குச் சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு முன்பாகவும், சுயேச்சைக் குழுக்களுக்கு முன்பாகவும் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள் அச்சிடப்படுவதுடன், அச்சின்னங்களுக்கு முன்பாக புள்ளடி இடுவதற்கான வெற்றுக் கூடும் அச்சிடப்படும்.

தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் யாரென்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு வட்டார மட்டத்திலும் விகிதாசார மட்டத்திலும் தயாரிக்கப்பட்டுள்ள அட்டவணையின் கீழ் கட்சிகளது, சுயேச்சைக் குழுக்களது அபேட்சகர்களின் பெயர்ப்பட்டியல் வாக்காளர்களது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையுடன் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். இது தவிர குறித்த அட்டவணையில் உள்ளபடி கட்சிகளது, சுயேச்சைக் குழுக்களது அபேட்சகர்களின் பெயர்ப்பட்டியல் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு குறித்த வாக்களிப்பு நிலையங்களின்  காட்சிப்படுத்தப்படும். இதன் பிரகாரம் அபேட்சகர்களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்படாது விடினும், தமது வாக்கினை அளிக்கவிருக்கும் கட்சியின் அல்லது குழுவின் அபேட்சகர் தொடர்பாகவும், மேற்குறிப்பிட்ட அட்டவணையின் மூலம் தாம் விரும்பிய அபேட்சகர் யாரென்பதனையும் அறிந்து கொள்ள முடியும்.

 

வாக்கெண்ணும் நிலையங்கள் எவ்வாறு அமைத்துக் கொள்ளப்படும்?

ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாக்களிப்பு நிலையம் அமைந்திருக்குமிடத்து, அதே வாக்களிப்பு நிலையத்தில் வாக்கெண்ணல் நடாத்தப்படும். ஒரு வட்டாரத்தினுள் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் அமைந்திருக்குமிடத்து, தெரிவத்தாட்சி அலுவலரால் தீர்மானிக்கபடுகின்ற ஒரு வாக்களிப்பு நிலையத்திலோ, அல்லது வாக்களிப்பு நிலையங்களிலோ வாக்குகள் எண்ணப்படும்.

 

இந்த தேர்தல் முறையின் கீழ் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பது எவ்வாறு

இந்த தேர்தல் முறையின் கீழ் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படும் போது. முக்கியமாக நான்கு விடயங்கள் சம்பந்தமாக கவனத்தைச் செலுத்துதல் வேண்டும்.

ஒருமை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

பன்மை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

பெண் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

இவற்றை உதாரணங்கள் மூலம் விளக்குவதனால் புரிந்து கொள்வதற்கு இலகுவாக அமையும்.

உதாரணம்-:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள யூ என்னும் பிரதேச சபை ஒருமை வட்டார மட்டத்திலான 14 வட்டாரங்களையும், இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட பன்மை வட்டார மட்டத்திலான 01 வட்டாரத்தையூம் கொண்டுள்ளது.  இந்த பிரதேச சபைக்காக X, Y, Z என்னும் மூன்று அரசியற் கட்சிகள் போட்டியிடவுள்ளன என நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

 

வட்டாரம்

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்

அளிக்கப்பட்ட வாக்குகள் (70%)

பெற்றுக் கொண்ட வாக்குகள்

வட்டாரத்தில் வெற்றியீட்டியது

X கட்சி

Y கட்சி

Z கட்சி

X கட்சி

Y கட்சி

Z கட்சி

01

4500

3150

1638

1166

346

01

-

-

02

5200

3640

1893

1347

400

01

-

-

03

6600

4620

1710

2402

508

        - 

01

-

04

5000

3500

1820

1295

385

01

-

-

05

6000

4200

1554

2184

462

         - 

01

-

06

4900

3430

1784

1269

377

01

-

-

07

7250

5075

2639

1878

558

01

-

-

08

4750

3325

1729

1230

366

01

-

-

09

5200

3640

1893

1347

400

01

-

-

10

4100

2870

1492

1062

316

01

-

-

11

4600

3220

1675

1191

354

01

-

-

12

5100

3570

1856

1321

393

01

-

-

13

6300

4410

1632

2293

485

        - 

01

-

14

4200

2940

1529

1087

323

01

-

-

15

பன்மை வட்டாரம்

8500

5950

3094

2202

654

02

-

-

மொத்தம்

82200

57540

27938

23274

6327

13

03

00

 

I. ஒருமை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

ஒருமை வட்டார மட்டத்திலான வட்டாரத்தின் சகல வாக்களிப்பு நிலையங்களினதும் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட அபேட்சகர் குறித்த வட்டாரத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்

இதன் பிரகாரம் மேலே உதாரணத்தில் காட்டப்பட்டுள்ளவாறு x கட்சியானது 1,2,4,6,7,8,9,10,11,12,14 ஆகிய ஓருமை வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளதனால், அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட குறித்த அபேட்சகர்கள் அவ்வட்டாரங்களின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவதுடன், Y கட்சி 3,5,13 ஆகிய வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளதனால் அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட குறித்த அபேட்சகர்கள் அவ்வட்டாரங்களின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவர். Z கட்சி எதுவித வட்டாரத்திலும் வெற்றியீட்டாத காரணத்தினால் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படமாட்டார்கள்

 

II. பன்மை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

பன்மை வட்டாரமொன்றில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட அபேட்சகர்கள் இருவர் அல்லது மூவர் அவ்வட்டாரத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதன் பிரகாரம் மேலே உதாரணத்தில் காட்டப்பட்டுள்ளவாறு X கட்சியானது 15 என்னும் பன்மை வட்டாரத்தில் வெற்றியீட்டியூள்ளதனால், அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட குறித்த அபேட்சகர்கள் இருவரும் அவ்வட்டாரத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவர்.

 

III. விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

உள்ளுர் அதிகார சபை ஒன்றின் நிருவாகப் பிரதேசத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சகல அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் மொத்தக் கூட்டுத்தொகையை குறித்த உள்ளுர் அதிகார சபைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையால் பிரிக்கப்பட்டு வரும் சராசரி அளவு தீர்க்கமான மதிப்பு ஆகும்.

இந்தத் தீர்க்கமான அளவினால் ஒவ்வொரு அரசியற் கட்சியும், சுயேச்சைக் குழுவும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் பிரிக்கப்படும் பொழுது குறித்த அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு உரிய முழு உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து அவர்கள் வட்டார மட்டத்தில் பெற்றுக்கொண்ட உறுப்பினர் எண்ணிக்கையைக் கழித்து வரும் எஞ்சிய எண்ணிக்கை குறித்த ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய விகிதாசார அட்டவணைக்குரிய உறுப்பினர் எண்ணிக்கையாகக் கருதப்படும்.  

ஏதேனுமொரு அரசியற் கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவிற்கு உரிய குறித்த எஞ்சி வரும் எண்ணிக்கை ஒற்றை மதிப்பெண்ணாக இருப்பின், அதாவது விகிதாசார முறைக்கு உரிய எண்ணிக்கையிலும் விட வட்டார மட்டத்தில் தெரிவு செய்யப்படும் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த மேலதிக எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளுர் அதிகார சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகமாகும். (Over Hang)

 

இதன் பிரகாரம் மேலே குறிப்பிடப்பட்ட உதாரணத்தின் அடிப்படையில், 

வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை = 57540
தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை = 26
சராசரி மதிப்பு = 57540 / 26
  = 2213 

 

 

கட்சியின் பெயர்

பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள்

சராசரி தேர்ந்தெடுக்கப்பட

வேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை

வட்டார மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை

விகிதாசார முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை

மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை

X

27938

2213

27938/2213

12.62

12

1382 எஞ்சியது

13

13

00

13

Y

23274

2213

23274/2213

10.51

10

1144 எஞ்சியது

10

03

07

10

Z

6327

2213

6327/2213

2.85

2

1901 எஞ்சியது

03

00

03

03

* இந்த விகிதாசார அட்டவணையின் கீழ் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் முறையானது,  இவ்வட்டவணையைப் போன்று தோல்வியடைந்த வட்டாரங்களிலிருந்தும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட முடியும்

 

IV. பெண் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

குறித்த உள்ளூர் அதிகார சபை நிருவாகப் பிரதேசத்திற்காகப் போட்டியிடும் அனைத்து அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர் எண்ணிக்கையின் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பினும், கட்சிகளது மூன்று உறுப்பினர்கள் அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள் குறைவாக இருப்பினும் அவற்றைக் கழித்து எஞ்சியுள்ள அதிகப்படியான வாக்குகள் பெற்ற உறுப்பினர்கள் குறித்த உள்ளூர் அதிகார சபைக்குத் தெரிவு செய்யப்படுவர். (25 சதவீதமான எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கை) பிரிக்கப்பட்டு வரும் சராசரி எண்ணிக்கையால் குறித்த கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பிரித்து வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

உதாரணம் -  மேலே குறிப்பிடப்பட்ட A என்னும் பிரதேச சபை தொடர்பான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் சதவீதமும், தொகுதிகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு அமையும்.

 

கட்சி

பெற்றுக் கொண்ட வாக்குகள்            மொத்த

வாக்காளர் எண்ணிக்கை

சதவீதம்

வெற்றி பெற்ற தொகுதிகள்

X

27938

57540

48.55

13

Y

23274

57540

40.44

10

Z

6327

57540

10.99

03


இதன் பிரகாரம் பெண் உறுப்பினர்களைத் தெரிவு செய்யப்படும் போது X, Y  ஆகிய இரண்டு கட்சிகளும் பெற்றுக் கொண்ட வாக்குகள் மாத்திரமே கணிக்கப்படும்

இதன் அடிப்படையில் X, Y  ஆகிய கட்சிகள்; பெற்றுக் கொண்ட வாக்குகள் வாக்குகளின் கூட்டுத்தொகை (27938+23274)

=

51212

25 சதவீத சமான உறுப்பினர்கள் எண்ணிக்கை (26/4)   

=

6.5

சராசரி (51212 / 6.5)  

=

7878.76

X கட்சியினால் நியமிக்கும் பெண் உறுப்பினர்கள் (27938 / 7878.76)

=

3.5

( தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாத முழு எண்)

Y கட்சியினால் நியமிக்கும் பெண் உறுப்பினர்கள் (23274 / 7878.76)

=

2.95

( தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாத முழு எண்)

 

தவிசாளர் / துணைத் தவிசாளர் அல்லது முதல்வர் /பிரதி முதல்வர் ஆகியோர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர்

ஏதேனுமொரு அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு குறித்த உள்ளூர் அதிகார சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் நூற்றுக்கு 50 சதவீதமானவற்றில் வெற்றி பெற்றிருந்தால் அவ்வரசியற் கட்சியின் செயலாளருக்கு அல்லது சுயேச்சைக் குழுத் தலைவருக்கு இப்பதவி நியமனங்கள் தொடர்பாக தீர்மானிக்க முடியும்.

எந்தவொரு அரசியற் கட்சியும் அல்லது சுயேச்சைக் குழுவும் குறித்த உள்ளூர் அதிகார சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் நூற்றுக்கு 50 சதவீதமான எண்ணிக்கை பெறத் தவறியிருந்தால் குறித்த உள்ளூர் அதிகார சபையின் ஆரம்பக் கூட்டத்தொடரின் போது அங்கு சமூகமளித்திருக்கும் உறுப்பினர்களிடையே நடாத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் மேற்படி நியமனங்கள் செய்யப்படலாம்.

 

உறுப்பினர் ஒருவர் இறந்தால் அல்லது கேட்டு விலகினால் அல்லது வேறேதேனும் காரணத்தினால் வெற்றிடம் ஏற்படுமிடத்து, அந்த வெற்றிடத்தை நிரப்புவது எவ்வாறு?

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பழைய தேர்தல் முறையின் பிரகாரம் இடைத்தேர்தல் நடாத்தப்பட மாட்டாது என்பதுடன், வெற்றிடத்திற்காக ஒருவரைப் பெயர் குறித்து நியமிக்கும் அதிகாரம் கட்சியின் கட்சிச் செயலாளருக்கு உள்ளது.