வாக்காளர் பதிவு மற்றும் தேருநர் இடாப்பு மீளாய்வு வருடாந்தம் மேற்கொள்ளப்படும். தேர்தல்கள் ஆணையாளரால் ஒவ்வொரு மாவட்டத்திற்காகவும் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்ற மாவட்டச் செயலாளர் /அரசாங்க அதிபரின் மேற்பார்வையின் கீழ் மீளாய்வுப் பணிகள் மேற்கொள்ளல் மற்றும் நிருவகித்தல் மாவட்ட மட்டத்தில் தேர்தல்கள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேட்ட பிரதி / பிரதி / உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களால் (உதவிப் பதிவு அலுவலர்கள்) மேற்கொள்ளப்படும். பதிவு அலுவலரினால் வீடுவீடாகச் சென்று வாக்காளர்களின் தகவல்களைச் சேகரிப்பதற்காக கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஒவ்வொரு வீடுகளுக்காகவும் கணக்கெடுப்புப் படிவங்களை (பிசீ படிவம்) பிழையின்றி பூரணப்படுத்துவது வீட்டுத் தலைவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. கிராம மட்டத்தில் அரச அலுவலரான கிராம அலுவலரினால் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, கணக்கெடுப்புப் பணிகள் சிக்கலான நகர் பிரதேசங்களில் (உ-ம் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மாநகர அதிகார எல்லைகள்) இப்பணிகள் விஷேட கணக்கெடுப்பு அலுவலர்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்விஷேட கணக்கெடுப்பு அலுவலர்கள் என்பது அரச சேவையில் பல்வேறு சேவைகளில் தொழில் புரிகின்றவர்களாவர். மேலே காட்டப்பட்டுள்ள தகைமையீனங்களுக்கு உட்படாத குறித்த வருடத்தில் பிப்ரவரி மாதம் 01 ஆம் திகதிக்கு 18 வயது பூர்த்தியடைந்துள்ள இலங்கைப் பிரசைகள் தகைமைபெறும் முகவரியொன்றில் பதிவதற்கு உரித்துடையவர்களாவர்.
பூரணப்படுத்தப்பட்ட ஆவணம் (பிசீ படிவங்கள்) மற்றும் குறித்த ஏனைய அறிக்கைகள் கணக்கெடுப்பு அலுவலர்களால் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்குக் கையளிக்கப்பட்டதன் பின்னர், நடைமுறையிலுள்ள தேருநர் இடாப்பிலிருந்து நீக்கப்படும் பெயர்களை உள்ளடக்கிய "அ" பட்டியல் (A) மற்றும் மீளாய்வு தேருநர் இடாப்பில் புதிதாக உட்சேர்க்கப்படுகின்ற பெயர்ப்பட்டியல் "ஆ" பட்டியல் (B) கணனியூடாக தயாரிக்கப்பட்டதன் பின்னர், ஒவ்வொரு ஆண்டும் செப்தெம்பர் அல்லது ஒக்தோபர் ஆகிய மாதங்களில் 28 நாட்கள் (சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளவாறு) நடைமுறை தேருநர் இடாப்புடன் கீழே காட்டப்பட்டுள்ள இடங்களில் காட்சிப்படுத்தப்படும்.
அனைத்து மாவட்ட செயலகங்கள் அல்லது மாவட்டத் தேர்தல் அலுவலகங்கள் (முழு நாட்டிற்குமுரிய)
அனைத்து பிரதேச செயலகங்கள் (அதிகார எல்லைப் பிரதேசத்துக்குரிய)
அனைத்து உள்ளூர் அதிகார சபை நிறுவனங்கள் (அதிகார எல்லைப் பிரதேசத்துக்குரிய)
அனைத்து கிராம அலுவலர் அலுவலகங்கள் (கிராம அலுவலர் பிரிவிற்குரிய)
தற்போது செல்லுபடியான இடாப்பையும் அதிலிருந்து நீக்கப்படவுள்ள பெயர்ப்பட்டியலையும்; அதில் புதிதாக உட்சேர்க்கப்படவுள்ள பெயர்ப்பட்டியலையும் பரீட்சித்துப் பார்த்த பின்,ஆளெவருக்கும் தனது பெயர் குறித்த ஆண்டில் பதிவுசெய்வதற்கு சிபார்சுசெய்யப்பட்டிருக்கவில்லை எனத் தெரிய வருமாயின், உரிமைக்கோரிக்கையொன்றை முன்வைப்பதற்கும்>தேருநரொருவராகப் பதிவுசெய்துகொள்வதற்குத் தகுதிபெறாத ஆளொருவரின் பெயரைப் பதிவுசெய்வதற்கு சிபார்சுசெய்யப்பட்டிருப்பின்,அதனை எதிர்த்து ஆட்சேபனை முன்வைப்பதற்கும் (மேற்கூறிய) 28 நாள் நியதிச்சட்ட காலத்துள் வாய்ப்புக் கிடைக்கின்றது.
மாவட்ட சிரேட்ட/ பிரதி/ உதவி தேர்தல்கள் ஆணையாளரினால் கிடைக்கப்பெறும் உரிமைக் கோரிக்கைகளும்; ஆட்சேபனைகளும் பற்றிய விசாரணைகள் நடாத்திமுடிக்கப்பட்ட பின் உட்சேர்க்கப்பட வேண்டிய தகுதியுள்ள பெயர்களை உட்சேர்த்தும்,தகுதியற்ற பெயர்களை நீக்கியும்>இடாப்பை கணக்கெடுப்பு அலுவலர்களினால் ஒப்படைக்கப்பட்ட 'பிசி' படிவங்களுடன் மீண்டும் பரீட்சித்த பின்னர் தேருநர் இடாப்பை அத்தாட்சிப்படுத்துவதற்குரிய திகதிக்கு சுமார் ஒரு வார காலத்திற்கு முந்திய ஒரு நாளில் மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிலும்,அனைத்து கிராம அலுவலர் அலுவலகங்களிலும்,திணைக்களத்தின்; இணையத்தளத்திலும் 'வரைவு இடாப்பு'காட்சிப்படுத்தப்படும். குறிப்பிட்ட ஒரு வார காலத்துள்ளும் பிசி படிவங்களைப் பூரணப்படுத்தி உரிய காலத்துள் கணக்கெடுப்பு அலுவலரிடம் ஒப்படைத்திருக்கும் நிலையிலும்,உரிமைக் கோரிக்கைகளின் பரீட்சிப்புகளின்போது உரிமைக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக அறிவித்திருக்கும் நிலையிலும்; பெயர் உட்சேர்க்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரியவருமாயின்,உடனடியாக மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்கும்,உரிய கிராம அலுவலர்களுக்கும் எழுத்துமூலம் அறிவித்து தனது பெயரை தேருநர் இடாப்பில் உட்சேர்த்துக்கொள்ள முடியும்.
2012 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் தயாரிக்கப்படுகின்ற தேருநர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்பட்டது அடுத்த வருடத்தின் மே மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றிலாகும். இருப்பினும் எதிர்வரும் வருடங்களில் வருடாந்தம் தேருநர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தல், அதிகரித்த வேலைப்பளு மற்றும் தேர்தல்களை நடாத்த வேண்டியேற்படல் ஆகிய விடயங்களை கவனத்தில் கொண்டு குறித்த வருடத்தின் ஒக்தோபர் 31 ஆம் திகதி அல்லது திசெம்பர் மாதம் 31 ஆம் திகதி ஆகிய காலக்கெடுவினுள் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
* தேருநர் இடாப்பு மீளாய்வு சாதாரண நேரஅட்டவணை கீழே காட்டப்பட்டுள்ளதோடு, இத்தினங்கள் அந்தந்த வருடங்களில் பணிப்பொறுப்புக்களுக்கிணங்க மாற்றமடையமுடியுமென்பதோடு அம்மாற்றங்கள் தொடர்பாக ஊடகங்களூடாகவும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவும் இந்த இணையத்தளம் ஊடாகவும் அறிவுறுத்தப்படும்.
பணிகள் |
திசெம்பர் மாதம் 31 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்துவதாயின் |
குறித்த வருடத்தின் மீளாய்வு தொடர்பில் மாவட்டச் செயலாளர் / அரசாங்க அதிபர் மற்றும் பிரதி / உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களை அறிவுறுத்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் செயலாளர்களை அறிவுறுத்துதல். |
மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் |
கணக்கெடுப்பு அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் வகுப்புக்கள் |
ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 10 ஆம் திகதி வரை |
வீடுவீடாகச் சென்று 'பிசீ' படிவங்களை வீட்டுத் தலைவர்களுக்கு கையளித்தல். |
மே மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் யூன் மாதம் 21 ஆம் திகதி வரை |
'பிசீ' படிவங்களை வீட்டுத் தலைவர்களிடமிருந்து மீளக் கையேற்றல். |
யூன் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் யூலை மாதம் 25 ஆம் திகதி வரை |
கணக்கெடுப்பு அலுவலர்களிடமிருந்து ஆவணங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்குக் கையளித்தலும் பரிசீலித்தலும். |
யூன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி வரை |
"அ" பட்டியல் (A) (நடைமுறை தேருநர் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள்) "ஆ" பட்டியல் (B) (மீளாய்வு தேருநர் இடாப்பில் புதிதாக உட்சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்ப்பட்டியல்) கணனியூடாகத் தயாரித்தல், பரீட்சித்தல் மற்றும் காட்சிப்படுத்துவதற்காக தயார் செய்தல். |
யூன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை |
"அ" (A) மற்றும் "ஆ" (B) பட்டியல்களை காட்சிப்படுத்தல் மற்றும் ஆட்சேபனைகளை கையேற்றல் |
செப்தெம்பர் மாதம் 28 நாட்கள் |
பன்மைப் பதிவுக்குரிய அலுவல்கள் |
யூலை மாதம் தொடக்கம் ஆகஸ்ட மாதம் வரை |
உரிமை மற்றும் ஆட்சேபனைகளுக்குரிய விசாரணைகள் |
ஒக்தோபர் மாதம் |
தேருநர் இடாப்பை இற்றைப்படுத்தல் |
நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் |
தேருநர் இடாப்பை அத்தாட்சிப்படுத்தல் |
நவம்பர் மாதம் 30 ஆம் திகதி |