தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

தேர்தல் குற்றங்கள்

இலங்கை தண்டனைகள் சட்டக்கோவையின் பாராளுமன்றச் சட்டங்களில் அனைத்து தேர்தல்களிலும் இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பான விடயங்கள்  குறிப்பிடப்பட்டுள்ளன.  இச்சட்டங்கள் அனைத்துத் தேர்தல்களுக்கும் பொதுவான சட்டங்களாகும்.   குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் இணங்க இலக்கங்கள் மாறுபட்டிருக்கும்.  இந்த தேர்தல் குற்றங்கள் முக்கிய பல பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.

 

தேர்தல் குற்றங்கள்

பிறிதொரு நபருக்காக அல்லது பிறிதொரு நபராகத் தோற்றி வாக்களிக்கச் செல்லல் மற்றும் வாக்குச் சீட்டினை சேதப்படுத்துதல், வாக்குச் சீட்டினை மாற்றியமைத்தல்,  வாக்குச் சீட்டினைக் காட்டுதல் போன்ற குற்றங்களைப் புரிதல்  என்பன இதனுள் அடங்கும்.   இவ்வாறான குற்றங்களுக்கான தண்டனையாக இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனையுடன், ஏழு வருடங்களுக்குப் பிரஜாவுரிமையை இழக்கும் தண்டனைக்கும் ஆளாவார்கள்.

 

ஊழற் செயற்பாடுகள்

இதன் கீழ் இலஞ்சம், உபசாரங்கள் செய்தல், முறையற்ற பலவந்தப்படுத்தல் போன்ற குற்றங்கள் உள்ளடக்கப்படுகின்றன. இவ்வாறான குற்றங்களுக்கான தண்டனையாக 300 ரூபா அபராதமும், மூன்று வருடங்களுக்குப் பிரஜாவுரிமையை இழக்கும் தண்டனைக்கும் ஆளாவார்கள்.

 

சட்ட விரோதமான செயல்கள்

செய்தித்தாள்களில் பொய்யான தகவல்ளைப் பிரசுரித்தல் அல்லது அச்சிடல் போன்ற குற்றங்களும்,  அவ்வாறான செயல்களுக்குச் செலவு செய்தல் போன்ற குற்றங்களும்  இதனுள் அடங்கும். இவ்வாறான குற்றங்களுக்கான தண்டனையாக 300 ரூபா அபராதமும், மூன்று வருடங்களுக்குப் பிரஜாவுரிமையை இழக்கும் தண்டனைக்கும் ஆளாவார்கள்.

இவற்றைத் தவிர, வேட்பு மனுக்கள் கோரப்படல், வேட்பு மனுக்கள் கையேற்றல்,  நிராகரித்தல், தேர்தல் தின ஒழுங்குவிதிகள்,  வாக்களித்தல்,  வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணல்,  முடிவுகளை வெளிப்படுத்துதல், தேர்தல் முறைப்பாட்டு மனுக்கள் சமர்ப்பித்தல்  போன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளுக்கும் தேர்தல் சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன.