பதில்
திணைக்களத்தினால் ஐந்து விதமான தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. அவையாவன:
சனாதிபதித் தேர்தல் :-
(i) சனாதிபதி அவர்களின் பதவிக் காலம் அதாவது 05 ஆண்டுகள் பூர்த்தியடைவதற்கு ஒரு மாதத்திற்குக் குறையாததும், 02 மாதங்களுக்கு மேற்படாததுமான காலப்பகுதிகள்
(ii) சனாதிபதியின் பதவிக் காலத்தின் 04 ஆண்டுகள் கடந்ததன் பின்னர் சனாதிபதியினால் மற்றொரு பதவிக்காலத்திற்கான மக்களின் ஆணையொன்றைக் கோருவதற்கு தீர்மானிக்கப்படுமிடத்து.
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் :-
(i) பாராளுமன்றத்தின் பதவிக்காலமான 05 ஆண்டுகள் கடந்ததன் பின்னரோ அல்லது
(ii) பாராளுமன்றத்தின் 01 ஆம் அங்குரார்ப்பணக் கூட்டத்திலிருந்து 04 வருடங்கள் 06 மாதங்கள் வரையிலான காலப்பகுதியின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படின்.
மாகாண சபைத் தேர்தல்கள் :-
(i) மாகாண சபையின் பதவிக்காலம் 05 ஆண்டுகள் ஆகும். அப்பதவிக்காலம் முடிவடையுமிடத்து அல்லது
(ii) மாகாண ஆளுநரினால் சபை கலைக்கப்படுமிடத்து
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் :-
(i) பதவிக்காலம் 04 ஆண்டுகளான அக்காலப்பகுதி முடிவடைந்ததன் பின்னர் அல்லது
(ii) உள்ளூர் அதிகார சபை அமைச்சரினால் அதற்கு முன்னர் சபையொன்று கலைக்கப்படுமிடத்து
மக்கள் தீர்ப்பு :-
சனாதிபதி அவர்களினால் ஏதேனுமொரு விடயம் தொடர்பாக மக்கள் தீர்ப்பினைப் பெற்றுக் கொள்ளுமாறு கட்டளைப் பிறப்பிக்கப்படுமிடத்து.
சனாதிபதித் தேர்தலொன்றின் போது வேட்பாளர் ஒருவராகப் போட்டியிடுவதற்கான தகைமைகள்:-
01. இலங்கைப் பிரசையாகவிருத்தல்
02. 30 வயதிற்கு மேற்பட்டிருத்தல்
03. வாக்குரிமை உரித்துடைய ஒருவராவதற்கு அதாவது தேருநர் ஒருவராவதற்குரிய தகைமைகளைக் கொண்டுள்ள ஒருவராகவிருத்தல்
04. இலங்கை அரசியல் யாப்பின் 91ஆம் உறுப்புரையின் தகைமையீனங்களுக்கு உட்படாதிருத்தல் (இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு)
05. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றெனில் தகைமை பெற்றுள்ள எவரேனும் ஒரு பிரசையாவிருத்தல், வேறு அரசியல் கட்சியொன்று அல்லது தேருநர் ஒருவரால் பெயர் குறிக்கின்ற நபர் ஒருவரெனில், பாராளுமன்றத்தில் இருக்கின்ற அல்லது இருந்த உறுப்பினர் ஒருவராக இருத்தல்.
06. சனாதிபதிப் பதவிக்காக மக்களால் இரண்டு தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக இல்லாதிருத்தல்.
சனாதிபதி வேட்பாளர் ஒருவராக போட்டியிடுவதற்கான தகைமையீனங்கள்:-
01. மேற்குறித்த தகைமைகள் காணப்படாமை
02. இலங்கை அரசியல் யாப்பின் 91 ஆம் உறுப்புரையின் தகைமயீனங்களுக்கு உட்பட்டிருத்தல்.(இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு)
03. இலங்கை அரசியல் யாப்பின் 89 ஆம் உறுப்புரையின் பிரகாரம் தகைமையீனங்களுக்கு உட்பட்டிருத்தல்.(இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு)
சனாதிபதித் தேர்தலொன்றின் போது பெயர் குறித்த நியமனப் பத்திரங்களைக் கையளிக்கின்ற சந்தர்ப்பத்தின் போது முன்னைய தேர்தல்கள் ஆணையாளர் (தற்போதைய தேர்தல் ஆணைக்குழுவினால்) பெயர் குறித்த நியமனப் பத்திரத்தை நிராகரிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள். 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது (1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டம்)
பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் ஒருவராகப் போட்டியிடுவதற்கான தகைமைகள்:-
01. இலங்கைப் பிரசையாகவிருத்தல்
02. 18 வயது பூர்த்தியடைந்திருத்தல்.
03. வாக்குரிமை உரித்துடைய ஒருவராவதற்கு அதாவது தேருநர் ஒருவராவதற்குரிய தகைமைகளைக் கொண்டுள்ள ஒருவராகவிருத்தல்
04. இலங்கை அரசியல் யாப்பின்91ஆம் உறுப்புரையின் தகைமையீனங்களுக்கு உட்படாதிருத்தல்(இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு)
05. 1981 ஆம் ஆண்டின்01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் தகைமையீனங்களுக்கு உட்படாதிருத்தல் (குறித்த தகைமையீனங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.)
1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டதின் கீழ் உறுப்பினர் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுதல் தொடர்பில் செல்வாக்குச் செலுத்தும் தகைமையீனங்கள்:-
01. வாக்குச் சீட்டுக்கள் தொடர்பான தவறுகளின் கீழ் காட்டப்பட்டுள்ள தவறொன்றிற்கு(சட்டத்தின் 66 அ தொடக்கம் ஞ வரையான உப பிரிவுகள்) குற்றவாளியாக்கப்பட்ட தினத்திலிருந்து 7 ஆண்டுகள் கழியும் வரை.
02. ஆள்மாறாட்ட வாக்களிப்பு, உபசாரம் செய்தல், தகாத செல்வாக்கு, இலஞ்சம் வழங்குதல், வேட்பாளர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான போலியான கூற்றொன்றை வெளியிடுதல் போன்ற தவறுகள் தொடர்பில் நீதிமன்றமொன்றினால் குற்றவாளியாக்கப்பட்ட நபர் ஒருவருக்கு குற்றவாளியாக்கப்பட்ட தினத்திலிருந்து7ஆண்டுகள் கழியும் வரை.
03. பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட முரணான பழக்கமொன்றுக்கு குற்றவாளியாக்கப்பட்ட நபரொருவர் குற்றவாளியாக்கப்பட்ட தினத்திலிருந்து 3 ஆண்டுகள் கழியும் வரை.
பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பெயர் குறித்த நியமனப் பத்திரங்களைக் கையளிக்கின்ற சந்தர்ப்பத்தில் தெரிவத்தாட்சி அலுவலரினால் பெயர் குறித்த நியமனப் பத்திரத்தை நிராகரிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள். 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 19 ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது (1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம்)
மாகாணசபை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் ஒருவராக போட்டியிடுவதற்கான தகைமைகள்:-
01. இலங்கைப் பிரசையாகவிருத்தல்
02. 18 வயது பூர்த்தியடைந்திருத்தல்.
03. வாக்குரிமை உரித்துடைய ஒருவராவதற்கு அதாவது தேருநர் ஒருவராவதற்குரிய தகைமைகளைக் கொண்டுள்ள ஒருவராகவிருத்தல்
04. இலங்கை அரசியல் யாப்பின் 91ஆம் உறுப்புரையின் (இ), (ஈ),(உ), (ஊ) மற்றும் (எ) ஆகிய உப உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமையீனங்களுக்கு உட்படாதிருத்தல் (இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு)
05. 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் தகைமையீனங்களுக்கு உட்படாதிருத்தல் (குறித்த தகைமையீனங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.)
1988 ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாணசபை உறுப்பினர் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுதல் தொடர்பில் செல்வாக்குச் செலுத்தும் தகைமையீனங்கள்:-
01. அரசியல் யாப்பினால் விதிக்கப்பட்டுள்ள தகைமையீனங்கள்.
02. வாக்குச் சீட்டுக்கள் தொடர்பான தவறுகளின் கீழ் காட்டப்பட்டுள்ள தவறொன்றிற்கு (சட்டத்தின் 66 அ தொடக்கம் ஞ வரையான உப பிரிவுகள்) குற்றவாளியாக்கப்பட்ட தினத்திலிருந்து ஏழு ஆண்டுகள் கழியும் வரை.
03. 1978 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (குடியியல் தகுதியீனத்தை விதித்தல், இலக்கம் 01) சட்டம் அல்லது 1978 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் (குடியியல் தகுதியீனத்தை விதித்தல், இலக்கம் 02) சட்டத்தின் கீழ் தகைமையீனம் ஒன்றுக்கு உட்படுகின்ற நபர் ஒருவர் அத்தகைமையீனங்களுக்கு உட்பட்டுள்ள காலம் வரை.
04.அரசியல் யாப்பின் 81 ஆம் உறுப்புரையின் கீழ் குடியியல் தகுதியீனம் ஒன்றுக்கு உட்பட்டுள்ள சந்தர்ப்பமொன்றில், அக் காலப்பகுதியினுள்.
05. தேர்தலின் இரகசியம் பேணுதலை (77 ஆம் பிரிவு) மீறுதல் தொடர்பான குற்றமொன்றுக்கு குற்றவாளியாக்கப்பட்ட தினத்திலிருந்து 7 வருடங்கள் கழியாதிருத்தல்.
06. ஆள்மாறாட்ட வாக்களிப்பு, உபசாரம் செய்தல், தகாத செல்வாக்கு, இலஞ்சம் வழங்குதல் போன்ற ஊழல் பழக்கமொன்றுக்கு (78-82 பிரிவுகள்) குற்றவாளியாக்கப்பட்ட நபர் ஒருவருக்கு குற்றவாளியாக்கப்பட்ட தினத்திலிருந்து 3 ஆண்டுகள் கழியும் வரை.
07. போலியான வெளிப்படுத்துகை (85 ஆம் பிரிவு) செய்திப் பத்திரிகைகளில் வெளியிடுதல், சட்ட முரணான தொழிலில் அமர்த்துதல், வெளியீட்டாளரின் பெயர் அச்சகத்தின் பெயர் குறிப்பிடப்படாத பிரச்சார அறிவித்தல்கள் தொடர்பான சட்டமுரணான பழக்மொன்றுக்கு குற்றவாளியாக்கப்படின் குற்றவாளியாக்கப்பட்ட தினத்திலிருந்து 3 ஆண்டுகள் கழியும் வரை.
மாகாண சபை உறுப்பினர் பதவிக்காகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பெயர் குறித்த நியமனப் பத்திரங்களைக் கையளிக்கின்ற சந்தர்ப்பத்தில் தெரிவத்தாட்சி அலுவலரினால் பெயர் குறித்த நியமனப் பத்திரத்தை நிராகரிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள். 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது (1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம்)
உள்ளூர் அதிகார சபையொன்றின் உறுப்பினர் பதவிக்காகப் போட்டியிடுவதற்கான தகைமைகள்:-
01. இலங்கைப் பிரசையாகவிருத்தல்
02. 18 வயது பூர்த்தியடைந்திருத்தல்.
03. வாக்குரிமை உரித்துடைய ஒருவராவதற்கு அதாவது தேருநர் ஒருவராவதற்குரிய தகைமைகளைக் கொண்டுள்ள ஒருவராகவிருத்தல்
04. இலங்கை அரசியல் யாப்பின் 91ஆம் உறுப்புரையின் (இ), (ஈ),(உ), (ஊ) மற்றும் (எ) ஆகிய உப உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமையீனங்களுக்கு உட்படாதிருத்தல் (இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு)
05. குறித்த உள்ளூர் அதிகாரசபை அதிகாரப் பிரதேசத்தில் வதிவாளராயிருத்தல்.
06. உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 அத்தியாயம்) தகைமையீனம் ஒன்றுக்கு உட்படாதிருத்தல்.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 அத்தியாயம்) (திருத்தத்தின் கீழ் உள்ளூர் அதிகாரசபையொன்றிற்கு உறுப்பினர் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுதல் தொடர்பில் செல்வாக்குச் செலுத்தும் தகைமையீனங்கள்:-
01. குறித்த உள்ளூர் அதிகார சபையின் ஊழியர் ஒருவராகவிருத்தல் அல்லது பெயர் குறித்த நியமனங்களைக் கையேற்றல் ஆரம்பிக்கப்படும் தினத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் அதிலிருந்து விலகாதிருத்தல்.
02. ஆள்மாறாட்ட வாக்களிப்பு, உபசாரம் செய்தல், தகாத செல்வாக்கு, இலஞ்சம் வழங்குதல், வேட்பாளர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நடத்தைகள் தொடர்பான போலியான கூற்றொன்றை வெளியிடுதல் போன்ற ஊழல் பழக்கமொன்றுக்கு (82 அ தொடக்கம் க வரையான உப பிரிவுகள்) குற்றவாளியாக்கப்பட்டு அக் குற்றவாளியாக்கப்பட்ட தினத்திலிருந்து 7 ஆண்டுகள் கழியும் வரை. (தேர்தல் ஒன்றுக்குரியதாக வாக்காளரொருவராக முடியாது)
03. தேர்தல் சட்டங்களுக்கு முரணான ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளல், செய்திப் பத்திரிகையொன்றில் அல்லது இலத்திரனியல் ஊடமொன்றூடாக போலியான கூற்றுக்களை வெளியிடுதல் அல்லது ஒளிபரப்புதல் தேர்தல் சட்டங்களுக்கு முரணாக தொழிலில் அமர்த்துதல் போன்ற சட்ட முரணான பழக்கமொன்றுக்கு குற்றவாளியாக்கப்பட்டு அவ்வாறு குற்றவாளியாக்கப்பட்ட தினத்திலிருந்து 7 ஆண்டுகள் கழியும் வரை.
04. தேர்தலின் இரகசியம் பேணுதல் ஏற்பாடுகளை மீறுதல் (பிரிவு 77), பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள், வாக்குச் சீட்டுக்கள் முதலியன தொடர்பான தவறுகள் (பிரிவு 78), வாக்கெடுப்பு நாளன்று தடை செய்யப்பட்ட செயல்களைப் புரிதல் (81 (அ) பிரிவு (அ)),வாக்கெடுப்பு காலப்பகுதியினுள் துண்டுப் பிரசுரங்கள், அறிவித்தல்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தல் குற்றம் (81 (ஆ) பிரிவு) பன்முறை வாக்களித்தல் (82 ஆம் பிரிவு) ஆள்மாறாட்ட வாக்களிப்பு (82 (இ) பிரிவு), உபசாரம் செய்தல் (82 (ஆ) பிரிவு), தகாத செல்வாக்கு (82 (எ)) செய்திப் பத்திரிகைகள் இலத்திரனியல் ஊடகங்கள் என்பவற்றில் போலியான கூற்றுக்களை வெளியிடுதல், (82 (ஏ)) சட்ட முரணான தொழிலில் அமர்த்துதல், (82 (ஐ)) அச்சகத்தார், வெளியிடுநர் ஆகியோரின் பெயர் முகவரிகள் இல்லாத வெளிப்படுத்துகைகளை அச்சிடல், பகிர்ந்தளித்தல் தொடர்பான குற்ற்மொன்றுக்கு (82 (ஒ)) குற்றவாளியாக்கப்பட்ட நபர் ஒருவருக்கு அக்குற்றத்துக்குரிய தண்டனைக்கு மேலதிகமாக குற்றவாளியாக்கப்பட்ட தினத்திலிருந்து 05 வருடங்கள் கழியும் வரை (82 (க) பிரிவு).
உள்ளூர் அதிகாரசபைத் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பெயர் குறித்த நியமனப் பத்திரங்களைக் கையளிக்கின்ற சந்தர்ப்பத்தில் தெரிவத்தாட்சி அலுவலரினால் பெயர் குறித்த நியமனப் பத்திரத்தை நிராகரிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள். உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 262 ஆம் அதிகாரம் (திருத்தம் செய்யப்பட்ட) 31 ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன (262 அத்தியாயம்)
அரசாங்க ஊழியரே பதவி நிலை அலுவலர் ஒருவராயின் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் சேவையில் இருந்து கேட்டு விலகிக்கொள்ள வேண்டுமென்பதோடு பதவிநிலை அல்லாத ஒருவராயின் வேட்புமனுக் காலப்பகுதிக்குள்ளிருந்து தேர்தல் முடிவடையும் வரை சம்பளமற்ற லீவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
முடியாது.
ஒவ்வொரு தேர்தல் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முப்படைகள் மற்றும் பொலிஸ் பணியாட் குழுவினர், தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்ற அரச மற்றும் இலங்கை மத்திய வங்கி அலுவலர்கள், சிறைச்சாலைத் திணைக்களத்தின் அலுவலர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்.
முடியாது. வாக்கெடுப்பு நிலையத்தினுள் செல்ல முடியாது. ஆதலால் பொதுப் போக்குவரத்து சேவை (பஸ் மற்றும் புகையிரதத்தில் செல்ல வேண்டும்.) தனது அல்லது வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனமொன்றில் செல்வதாயின் வாக்களிப்பு நிலையத்திற்கு அரைகிலோமீற்றர் தூரத்தில் அதனை நிறுத்திவிட்டு நடந்து செல்லுதல் வேண்டும். எனினும் உடல் ஊனமுற்றவர்களுக்கு தேர்தல் தினத்திற்கு 07 நாட்களுக்கு முன்னர் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கோரிக்கையொன்றை சமர்ப்பித்து உத்தரவுப் பத்திரமொன்றைப் பெற்று வாக்களிப்பு நிலையத்திற்கு வாகனங்களில் செல்லமுடியும்.
தனது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் ஆணையாளர் அனுமதித்த ஆளடையாள ஆவணங்களான செல்லுபடியான வெளிநாட்டு கடவூச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமாருக்கான அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் திணைக்களத்தினால் கிராம அலுவலர் ஊடாக விநியோகிக்கப்படுகின்ற தற்காலிக அடையாள அட்டை என்பவற்றில் ஏதேனுமோர் ஆவணத்தை கட்டாயம் எடுத்துச் செல்லுதல் வேண்டும். மேலும் தனக்கு அஞ்சல் மூலம் கிடைக்கப்பெறுகின்ற உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை (Poll Card) எடுத்துச் செல்லல் வாக்காளருக்குப் போலவே வாக்களிப்பு நிலைய பணியாட்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் அதனையும் எடுத்துச் செல்லவும்.
ஆம். வாக்களிப்பு நிலையத்தில் உள்ள பணியாளர்கள் நால்வரினால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
01. முதலில் உள்ள அலுவலர் வாக்காளர் வசமுள்ள ஆளடையாள ஆவணத்தை (தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான வெளிநாட்டுக் கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், மதகுருமாருக்கான அடையாள அட்டை, அரசாங்க ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அல்லது கிராம அலுவலர் ஊடாக தேர்தல்கள் திணைக்களம் விநியோகித்த தற்காலிக அடையாள அட்டை) பரிசீலித்துப் பார்த்து அதிலுள்ள நிழற்படமும், நபரின் முகத்தோற்றமும் ஒத்திசையுமாயின் வாக்காளரை இரண்டாவதாகக் காணப்படுகின்ற அலுவலரிடம் ஆற்றுப்படுத்துவார்.
02. இரண்டாம் அலுவலர் வாக்காளர் வசமுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை (Official Poll Card) கேட்டு வாங்கி அவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் தேடிப்பிடித்து அவரிடம் அவரின் பெயரை விசாரித்து வாக்காளரின் பெயரையும் தொடர் இலக்கத்தையும் உரத்து மொழிவார். அதன் பின்னர் ஆட்சேபனை எதுவுமில்லையெனில் வாக்காளரை அடுத்து அமர்ந்துள்ள அலுவலரிடம் ஆற்றுப்படுத்துவார்.
03. மூன்றாம் அலுவலர் வாக்காளரின் இடதுகை சிறுவிரலை பரிசீலித்து மைபூசு கருவியொன்றின் மூலம் அவ்விரலை சுற்றி மை பூசுவார். விரலில் மையைப் பூசுவதற்கு இணங்காவிடத்து அத்தகைய வாக்காளர் ஒருவருக்கு வாக்கினை பிரயோகிக்க முடியாமற் போகக் கூடும். விரலை அடையாளமிட்டதன் பின்னர் அடுத்து அமர்ந்துள்ள அலுவலர் வாக்குச்சீட்டொன்றைத் தருவார்.
அதை எடுத்துக்கொண்டு வாக்கினை அடையாளமிடுவதற்காக மறைக்கப்பட்டுள்ள கூட்டிற்குள் சென்று வாக்குச்சீட்டில் தாம் விரும்பிய கட்சிக்கு அல்லது குழுவுக்கு வாக்கினை அடையாளமிட்டு, விரும்பின் வாக்குச்சீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள வேட்பாளர்களின் இலக்கங்களின் ஊடாக சுட்டிக்காட்டப்படுகின்ற வேட்பாளர்களுக்கு அல்லது அதனிலும் குறைந்த தொகையினருக்கு விருப்பினை அடையாளமிட்டு, வாக்குச்சீட்டை நன்றாக இரண்டாக மடித்து தேவைப்படின் நான்காக மடித்து வாக்குச்சீட்டை வாக்குப் பெட்டிக்குள் இடல்.
வாக்கெடுப்புத் தினம் வாக்காளர்கள், அலுவலர்கள், பாதுகாப்பிற்கெனவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள், உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள், வாக்களிப்பு நிலைய முகவர்கள் (Polling Agents) அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தலொன்றின் போது மாத்திரம் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளின் செயலாளர்கள்
இல்லை.
பார்வையுள்ளவர்களும் வாக்குச்சீட்டை அடையாளமிடுவதற்கான ஆற்றலுள்ளவர்களுமாக உள்ள போதிலும் வாக்களிப்பு முறை பற்றிய அறிவில்லாத ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தின் சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலர் அல்லது அவர் சார்பாக வேறோர் அலுவலர் வாக்குச்சீட்டொன்றை அடையாளமிடும் விதத்தை மாத்திரம் விளக்குவார். எனினும் பார்வைக் குறைபாடு காரணமாகவோ, உடலியல் குறைபாடு காரணமாகவோ வாக்குச்சீட்டை தனது கையால் அடையாளமிடமுடியாத ஒருவருக்கு தனது உதவிக்காக வேறொருவரை அழைத்து வர முடியும். இத்தகைய வாக்காளர்கள் கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அரசாங்க வைத்தியரொருவர் அத்தாட்சிப்படுத்திய சான்றிதழொன்றை எடுத்துவரல் வேண்டும். முறையாக ஆளடையாளத்தை நிரூபித்துக் கொண்டதன் பின்னர் வாக்காளரின் உதவியாளராக சிரேட்ட தலைமைதாங்கும் அலுவலர் மற்றும் தேர்தல் பணியாட் குழுவின் மேலுமொரு அங்கத்தவர் ஒருவரின் முன்னிலையில் வாக்களிப்புச் சிற்றறைக்குள் வாக்கினை அடையாளமிடமுடியும். எனினும் பார்வைக் குறைபாடுடைய வாக்காளர் ஒருவர் மற்றொருவரை உடன் அழைத்துவராவிடத்து சட்டத்தில் குறிப்பிடப்படாதுள்ள போதும் இதற்கு முன்னர் தேர்தல்களில் மேற்கொள்ளப்பட்டவாறு சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் மற்றோர் அலுவலருடன் வாக்காளரை வாக்களிப்புச் சிற்றறைக்குள் அழைத்துச் சென்று அவரிடம் விடயங்களை வினவி சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலர் வாக்காளர் கோருகின்றவாறு அடுத்த அலுவலரின் முன்னிலையில் வாக்கினை அடையாளமிட்டுக் கொடுப்பார்.
தேர்தலோடு தொடர்புடைய கடமைகளில் ஈடுபடல் / ஈடுபடுத்தப்படல் காரணமாக தேர்தல் தினத்தன்று தனிப்பட்ட முறையில் தமக்குரிய வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்கினை அடையாளமிட முடியாத அரசாங்கத்தின் அலுவலர்கள் / ஊழியர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட சபைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரசாங்க அலுவலர்கள், தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள அந்நிறுவனங்களின் சாரதிகளும் நடாத்துநர்களும், பொதுமக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்ற இலங்கை புகையிரத சேவையின், இலங்கை போக்குவரத்து சேவையில் கடமையில் ஈடுபட்டுள்ள நபர்கள், பாதுகாப்புத் துறைகளினதும், பொலிஸ் திணைக்களத்தினதும் அலுவலர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு நேரடியாகச் செல்லாமல் தேர்தல் தினத்திற்கு முந்திய தினமொன்றில் தபால் மூலம் தமது அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் ஊடாக வாக்குச்சீட்டினைத் தருவித்து வாக்கினை அளிப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய வாக்காளர்கள் அஞ்சல் வாக்காளர்களென அழைக்கப்படுவர்.
உத்தியோபூர்வ வாக்காளர் அட்டை தேர்தல் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரேனும் கிடைக்கப்பெறுகின்றமையினால் அத்தகைய வித்தியாசம் ஏதும் இருப்பின் உடனடியாக உரிய மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு அறிவித்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெயர் / அடையாள அட்டை இலக்கம் / பால் என்பன தொடர்பான பிழை திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கமுடியும். அவ்வாறு மேற்கொள்ளுதல் வேண்டும்.
முன்கூட்டியே தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத போதிலும் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலைய பணியாட் குழுவினர்களை இது தொடர்பாக அறிவூட்டி வாக்குச்சீட்டொன்றை பெற்றுக் கொள்ள முடியும். அங்கு உங்களிடம் விடயங்கள் பற்றி சுருக்க விசாரணையொன்றை மேற்கொள்வதோடு தேவைப்படின் வெளிப்படுத்துகையொன்றை நிரப்புமாறும் உங்களுக்கு அறிவிப்பார்.
இத்தகைய வாக்காளர்கள் தேர்தல் தினத்தன்று நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்கினைப் பிரயோகித்தல் மிகப் பொருத்தமாகும்.
நீர் உண்மையான வாக்காளராகவும் இருந்து உமது ஆளடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுமிருப்பின் உமக்கு வாக்குச்சீட்டொன்றை வழங்க முடியாதென வாக்களிப்பு நிலையத்திற்குப் பொறுப்பான அலுவலர் கூறுவாராயின், உடனடியாக தேர்தல்கள் அலுவலகத்திற்கு அல்லது பிரதேச செயலகத்தில் உள்ள இணைப்பு நிலையத்திற்கோ வாக்கெடுப்பு நிலையத்தை மேற்பார்வை செய்கின்ற உதவி தெரிவத்தாட்சி அலுவலருக்கோ அல்லது கிராம அலுவலருக்கோ அறிவிக்கவும்.
இவை அனைத்தையும் ஆற்றமுடிவது முன்கூட்டியே வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றால் மாத்திரமே.
எவரேனும் ஒரு வாக்காளர் வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்குச்சீட்டொன்றைக் கோருகின்றவிடத்து, வாக்காளர் இடாப்பில் அவர் அன்றைய தினம் வாக்கினைப் பிரயோகித்துள்ளதாக காட்டப்படுவதற்கென அவரின் பெயருக்கு முன்னால் சிறு கோடொன்று (-) இடப்பட்டிருப்பின், அத்தகைய வாக்காளர்களுக்கு சாதாரண வாக்குச்சீட்டொன்றை வழங்க முடியாது. அப்போது அவ்வாக்காளர்களின் ஆளடையாளத்தைப் பரிசீலித்துப் பார்த்து அவர் வாக்களிக்கவில்லையென திருப்தியடைய முடியுமாயின் வெளிப்படுத்துகையொன்றைப் பெற்று சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலர் அவருக்கு இளம் நீல நிறத்திலான வாக்குச்சீட்டுப் புத்தகமொன்றிலிருந்து வாக்குச்சீட்டொன்றை வழங்குவார். இதுவே கேட்டுப்பெறும் வாக்குச்சீட்டு எனப்படுவதோடு வாக்களிப்பு நிலைய எழுதுநர்களுக்கு இவ்வாக்குச்சீட்டினை விநியோகிக்கும் அதிகாரம் கிடையாது.
கேட்டுப்பெறும் வாக்குச்சீட்டுக்கள் நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டால் மாத்திரமே எண்ணப்படும்.
அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளமையினாலும், வாக்களிப்பு நிலைய முகவர்கள் உன்னிப்பாக இருப்பதாலும் ஆள்மாறாட்ட வாக்களிப்புக்கள் இடம்பெறாததாலும் தற்போது கேட்டுப்பெறும் வாக்குச்சீட்டு விநியோகத்திற்கான நிகழ்வுகள் அறிக்கையிடப்படுவது மிக அரிதாகும்.
தன்னால் அஞ்சல் வாக்குச்சீட்டொன்று கோரப்படாத நிலையில் தனது பெயர் அஞ்சல் வாக்குப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கும் கேட்டுப் பெறும் வாக்குச்சீட்டு மாத்திரமே விநியோகிக்கப்படும்
ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தலுக்கு முன்கூட்டியே உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்று அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் வாக்கிற்கு விண்ணப்பித்து அஞ்சல் வாக்காளராக அங்கீகரிக்கப்பட்டிருப்பின் அதுபற்றிய குறிப்பொன்று அவ்வாக்குச்சீட்டில் இடப்பட்டிருக்கும். ஆதலால் எவரேனும் ஒரு வாக்காளர் அஞ்சல் வாக்கிற்கு விண்ணப்பிக்காத அதே நேரம் அத்தகைய குறிப்பொன்று உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டில் இடப்பட்டிருந்தால் உடனடியாக தனது பிரிவிற்குரிய கிராம அலுவலருக்கும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் அறிவித்தல் அத்தியாவசியமாகும். அப்போது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்பதோடு அறிவித்தல் தாமதிக்கப்படின் எதனையும் செய்யமுடியாது.
இத்தகைய சந்தர்ப்பமொன்றில் தான் அஞ்சல் வாக்கிற்காக விண்ணப்பிக்கவில்லையெனில் அஞ்சல் வாக்காளர்களுக்கான விசேட பெயர்ப்பட்டியலைப் பரிசீலிக்குமாறு சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலரிடம் கேட்டுக்கொள்ள வேண்டுமென்பதோடு அவ்வாவணத்தில் பெயர் குறிக்கப்படாவிடில் வாக்கினைப் பிரயோகிக்க முடியும்.
அந்த விசேட (அஞ்சல் வாக்கு) பெயர்ப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பின் வாக்கினைப் பயன்படுத்திய ஒருவராகப் கருதப்பட வேண்டி வருவதால் உரிய வாக்காளருக்கு பெற்றுக் கொள்ள முடிவது கேட்டுப்பெறும் வாக்குச்சீட்டொன்றை மாத்திரமே ஆகும். அதாவது இளம் நீலநிறத்திலான விசேட வாக்குச்சீட்டொன்றை மாத்திரமே ஆகும்.
வேறொரு வாக்காளரின் வாக்கினை அஞ்சல் வாக்கொன்றாகக் கோருதல் அறிக்கையிடப்படுவது ஒரே ஊரில் ஒரே பெயர் / குடும்பப் பெயர் கொண்ட வாக்காளர்கள் ஏராளமாக இருக்கின்றவிடத்தும் குடும்ப அங்கத்தினர்களுக்கு ஒரே விதத்திலான பெயர்கள் காணப்படுகின்றவிடத்தும் பிழையான தகவல்களை நிரப்புகின்ற போதிலுமாகும். முன்கூட்டியே இத்தகைய நிகழ்வூகளோடு தொடர்புடைய ஆட்கள் கூட இதுபற்றி அறிவூட்டப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வாக்காளருக்கும் தபால்மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்றை அனுப்பி வைக்கின்றபோது வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்கள் என அறிக்கையிடப்பட்டிருப்பின் "வெளிநாடு சென்ற வாக்காளர் ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது" என்ற குறிப்பு இடப்பட்டிருக்கும்.
இத்தகைய குறிப்புக்களில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் இடப்பட்டுள்ள வாக்காளர்கள் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருப்பின் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்கின்ற போது தனது செல்லுபடியான வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை எடுத்துச் செல்லல் அவசியமாகும். ஏனெனில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததாக நிரூபிப்பதற்கு அது பயனுள்ள ஒன்றாதலால் ஆகும்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ள போதிலும் கடவுச்சீட்டு உங்கள் வசம் இல்லாத சந்தர்ப்பத்திலும் தேசிய அடையாள அட்டையொன்றை அல்லது வேறு செல்லுபடியான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையொன்றைப் பயன்படுத்தி உங்களது ஆளடையாளத்தை அத்தாட்சிப்படுத்த முடியுமெனின் உங்களுக்கு சாதாரண வாக்குச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான உரித்துண்டு. வெளிநாடு சென்றிருந்து வருகை தந்துள்ள வாக்காளர்களுக்கு கடவுச்சீட்டு இல்லையெனில் அதுபற்றி கிராமஅலுவலர் முன்கூட்டியே அறிவித்து உடனடியாக வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லுதல் பொருத்தமாகும். வாக்களிப்பு நிலையத்தில் சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு உரிய விடயங்களை அறிவித்து அவரின் விசாரணைகளுக்குப் பதிலளித்து தேவைப்படின் வெளிப்படுத்துகைகளையும் நிரப்பியதன் பின்னர் உங்களுக்கு வாக்குச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு காரணத்தில் வாக்குச்சீட்டொன்றை வழங்குதல் நிராகரிக்கப்படின் அது தொடர்பாக கிராம அலுவலருக்கு பிரதேச செயலகத்தின் இணைப்பு அலுவலருக்கு / தேர்தலின் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலருக்கு / மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு அது தொடர்பாக துரிதமாக முறைப்பாடு செய்தல் வேண்டும். இதனை செய்ய முடிவது நேரக்காலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றால் மாத்திரமே.
எக்காலத்திலும் வெளிநாடு சென்றிராத வாக்காளர் ஒருவருக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்றில் "வெளிநாடு சென்றிருப்பதாக" குறிப்பீடு இடப்பட்டிருப்பின் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெற்றிருந்தால் கிராம அலுவலருக்கு / தேர்தல்கள் அலுவலகத்திற்கு அறிவித்தல் அவசியமாகும்.
முன்கூட்டியே அவ்வறிவித்தலை மேற்கொள்ள முடியாதெனில் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர் கிராம அலுவலருக்கு தகவல்களை அறிவித்து வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லுதல் வேண்டும்.
வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டொன்றை விநியோகிக்க முன்னர் வெளிப்படுத்துகைப் பத்திரமொன்றை நிரப்பிக் கொடுக்குமாறு அறிவித்தால் அதனை நிரப்புதல் வேண்டும்.
இத்தகைய வாக்காளர் ஒருவருக்கு வாக்கினைப் பிரயோகிப்பதில் பிரச்சினை ஏதும் இருப்பின் உடனடியாக கிராம அலுவலர் / பிரதேச செயலகத்தின் இணைப்பு / அலுவலர் வாக்களிப்பு நிலைய மேற்பார்வை உதவி தெரிவத்தாட்சி அலுவலர் / மாவட்ட தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தலுக்கு முன்னர் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்று கிடைக்கப்பெறுவதோடு இறப்பெய்தியதாக அறிவிக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்காளர்களின் "இறப்பெய்திய வாக்காளரென அறிக்கையிடப்பட்டுள்ளது" என்ற குறிப்பு இடப்பட்டிருக்கும்.
இக்குறிப்பு பிழையானது எனத் தெரியவரின் உடனடியாக பிரிவின் கிராம அலுவலருக்கும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கும் அறிவிக்கவும். அப்போது உடனடியாக உரிய பிழைதிருத்தம் மேற்கொள்ளப்படும்.
ஏதேனும் ஒரு காரணத்தினால் நேரகாலத்துடன் அவ்வறிவித்தலை மேற்கொள்ள முடியாமல் போகுமிடத்து தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர் இது தொடர்பாக கிராம அலுவலரை அறிவூட்டி தேசிய அடையாள அட்டையையும் எடுத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லல் பொருத்தமாகும்.
வாக்களிப்பு நிலையத்தில் இது தொடர்பாக சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலரை அறிவூட்டி பின்னர் தேவைப்படின் வெளிப்படுத்துகையொன்றிலும் கையொப்பமிட்டதன் பின்னர் வாக்குச்சீட்டொன்றை வழங்க சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலர் நடவடிக்கை எடுப்பார்.
ஏதேனும் பிரச்சினை ஏற்படுமிடத்து கிராம அலுவலர், பிரதேச செயலகத்தின் இணைப்பு அலுவலர், வாக்களிப்பு நிலைய மேற்பார்வைக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளல் பொருத்தமாகும்.
வாக்களிப்பு மாலை 4.00 மணிக்கு முடிவடைந்ததன் பின்னர், ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையத்திற்கும் பொறுப்பான தலைமைதாங்கும் அலுவலர் பொலிஸ் பாதுகாப்போடு கொண்டுவந்து கையளிக்கின்ற அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டுக்களை உள்ளடக்குகின்ற வாக்குப் பெட்டிகள் மற்றும் ஏனைய அச்சிடப்பட்ட உறைகள் வாக்கெண்ணல் நிலையத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களினால் கையேற்கப்படும். அரசியல் கட்சிகள் / சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வாக்கெண்ணல் ஆரம்பிக்க வேண்டிய நேரத்தைக் கடந்திருப்பின் வாக்கெண்ணலும் ஆரம்பிக்கப்படும். வாக்கெண்ணும் நிலையங்களில் வன்செயல்கள் நிகழ்ந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்கள் எவையேனும் இருப்பின் அவற்றின் வாக்குகளை எண்ணாமல் மீள் வாக்களிப்பு நடாத்தப்படும். வாக்கெண்ணல் மாவட்டத்தின் மாவட்ட செயலகம் (கச்சேரி), தொழில்நுட்பக் கல்லூரி, பாடசாலைக் கட்டடங்கள் போன்ற அரசாங்கக் கட்டடங்களில் ஆகும். வாக்கெண்ணல் மண்டபமொன்றில் பொதுவாக சுமார் 10 வாக்கெடுப்பு நிலையங்களின் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் (10,000 முதல் 12,000) வரை கணக்கெடுக்கப்படும்.
வாக்கெண்ணலுக்குப் பொறுப்பாக விளங்குபவர் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் ஒருவர் (அரசாங்க சேவையின் சிரேட்ட பதவிநிலை அலுவலரொருவர்) ஆவார். அவருக்கு உதவியாளர்களாக மேலும் 08 உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் வாக்கெண்ணல் பணிகளுக்காக சுமார் 40 அலுவலர்களும் ஒரு வாக்கெண்ணல் நிலையத்தில் ஈடுபடுத்தப்படுவர். வாக்கெண்ணலை அவதானிப்பதற்காகப் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்களுக்கான முகவர்கள் ஐவர் வீதம் நியமனம் செய்வதற்கு அனுமதியுண்டு. அஞ்சல் வாக்கெண்ணல் நிலையமொன்றுக்கு நியமனம் செய்யப்பட முடிந்த முகவர்கள் இருவர் மாத்திரமே ஆவர்.
வாக்கெண்ணல் மூன்று முக்கிய கட்டங்களாக நடைபெறும்.
முதலாம் கட்டம்
வாக்களிப்பு நிலையங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள வாக்குப்பெட்டிகள் ஒவ்வொன்றாக வெவ்வேறாகத் திறக்கப்பட்டு ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள வாக்குச்சீட்டுக்களின் எண்ணிக்கைக் கணக்கிடப்பட்டு குறித்துக் கொள்ளப்படும். அவ்வாறு கணக்கிடப்பட்ட வாக்குச்சீட்டுக்களை மண்டபத்திலுள்ள பெரிய பெட்டியிலிட்டு அதிலுள்ள வாக்குச்சீட்டுக்கள் ஒன்றாகக் கலக்கச் செய்யப்படும். அனைத்துப் பெட்டிகளும் திறக்கப்பட்டு வாக்குச்சீட்டுக்கள் எண்ணப்பட்டதன் பின்னர் முதலாம் கட்டம் முடிவுக்கு வரும்.
இரண்டாம் கட்டம்
இரண்டாம் கட்டத்தின் 1 ஆம் உபகட்டத்தின் கீழ் பெரிய பெட்டியில் உள்ள வாக்குச்சீட்டுக்களை வாக்கெண்ணல் அலுவலர்கள் அமர்ந்திருக்கின்ற மேசையின் மீது வைத்து அனைத்து அவ்வலுவலர்களும் ஒவ்வொரு கட்சி மற்றும் குழுவின் அடையாளமிடப்பட்ட சின்னங்களுக்கு ஏற்ப வேறுபடுத்தி அந்தந்த கட்சி / குழு சார்பாக வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் இடுவர்.
இரண்டாம் கட்டத்தின் 2 ஆம் உபகட்டத்தின் கீழ் வாக்கெண்ணல் மேசையை ஐந்து பகுதியாகப் பிரித்து அந்தந்த கட்சி / குழுக்களுக்கேற்ப வேறுபிரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுப் பெட்டிளை வேறாக எடுத்து அடுத்து அமர்ந்துள்ள அலுவலர் குழுவினால் மீள எண்ணி அதன் பின்னர் அடுத்த குழுவினால் எண்ணப்பட்டு, 50 சீட்டுக்கள் கொண்ட கட்டுக்களாகத் தயாரிக்கப்படும். அவ்வாறு கட்டுக்களாகக் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டிலும் உள்ள எண்ணிக்கை, வாக்களிக்கப்பட்டுள்ள விதம் என்பன மீண்டும் சரிபிழை பார்க்கப்பட்டு, அதன்பின்னர் ஒவ்வொரு கட்சிக்கும் / குழுவிற்கும் கிடைக்கப்பெற்றுள்ள வாக்குகளை எண்ணி முடிவுகள் பெறப்படும். மீள் எண்ணல் தேவையென கட்சி வாக்கெண்ணல் மண்டபத்திலுள்ள முகவர்கள் கோரிக்கை விடுப்பின் 02 மீளெண்ணல்களுக்கு இடமுண்டு.
மூன்றாம் கட்டம்
இச்சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு கட்சி / குழு பெற்றுக் கொண்டுள்ள செல்லுபடியான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய வாக்குச்சீட்டுக்களை வெவ்வேறாக எடுத்து அவற்றின் விருப்புக்கள் விருப்பு1, விருப்பு2, விருப்பு3 என அடையாளமிடப்பட்டுள்ள உரிய ஒப்பீட்டு படிவங்களில் (Tele sheet) குறிப்பீடு செய்யப்படும். அவ்வாறு விருப்புக்கள் அடையாளமிடப்பட்டதன் பின்னர் இரண்டு பொழிப்புக்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து வேட்பாளர்களும் பெற்றுக் கொண்ட விருப்புக்களின் எண்ணிக்கையை அடையாளமிட்டுக் கொண்டதன் பின்னர், பொழிப்புக்கள் இரண்டையும் (Summary Sheets) தயாரித்து அனைத்து வேட்பாளர்களும் பெற்றுக் கொண்ட விருப்புக்களின் எண்ணிக்கையைக் குறித்ததன் பின்னர் வாக்கெண்ணல் முடிவுக்கு வரும்.
ஒவ்வொரு கட்சி / குழு பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையும், ஒவ்வொரு வேட்பாளர் பெற்றுக் கொண்ட விருப்புக்களின் எண்ணிக்கையும் இரண்டு அறிக்கைகளாக தெரிவத்தாட்சி அலுவலர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள முடிவுகள் வெளியிடப்படும் நிலையத்திற்கு கையளிக்கப்படும்
முடிவுகளை அட்டவணைப்படுத்தலும், வெளியிடலும்.
முடிவுகளை அட்டவணைப்படுத்தல் மற்றும் வெளியிடல் நிலையத்திற்கு அனைத்து வாக்கெண்ணல் நிலையங்களில் இருந்து வாக்கெண்ணல் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் முதலில் ஒவ்வொரு கட்சி மற்றும் குழு பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கையின் விகிதாசாரத்திற்கு அமைய உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்படும். விருப்புக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்றுக் கொண்டுள்ள விருப்புக்களின் எண்ணிக்கையைத் தயாரித்து அவர்கள் பெற்றுக் கொண்டுள்ள விருப்புக்களின் எண்ணிக்கைக்கு அமைய ஒவ்வொரு கட்சியிலிருந்தும் குழுவிலிருந்தும் நியமனம் செய்யப்படுகின்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.