தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் எதிர்வரும் நான்கு வருட காலப் பகுதியினுள் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்ட கருத்திட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கி 2017-2020 வரையான நான்கு வருட மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ஆணைக்குழுவின் பணியாட்குழுவினர், அரச அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் முகவர்கள், சிவில் அமைப்புக்கள், கண்காணிப்பு அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், அங்கவீனர்கள் மற்றும் முதியோர் பிரசைகளின் அமைப்புக்கள், தொழிற்சங்க தொழிற்படுநர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் கருத்தில் கொள்ளப்பட்டு பங்கேற்பு மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மூலோபாயத் திட்டதினூடே சனநாயகம், சர்வஜன வாக்குரிமை, தேர்தல் செயன்முறை என்பன தொடர்பாக பிரசைகள், அரசியல் வாதிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் அங்கத்தவர்கள், சனசமூக அமைப்புக்களின் அங்கத்தவர்கள், பொலிஸ் அலுவலர்கள், அரச அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் தரப்புக்களையும் தேசிய, மாவட்ட, பிரதேச மட்டங்களிலும் மற்றும் கிராமிய மட்டத்திலும் அறிவுறுத்தப்படும். இந்த அறிவுறுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தினூடாக எதிர்காலப் பிரசைகளான பாடசாலை மாணவர்களுக்கு சனநயாகம் மற்றும் சர்வஜன வாக்குரிமை தொடர்பாக அறிவுறுத்தப்படுகின்றது