ஒரு அரசாங்கத்தினால் நாட்டுப் பிரஜைகளுக்கு வழங்கப்படும் அனைத்து சட்ட ரீதியான உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கும் உரித்து உடையவர்களாகவும், அவர்கள் அச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிவானவர்களாக இருத்தலும், அவர்களுக்குக் கையளிக்கப்படும் கடமைகளை சரிவர நிறைவேற்றும் கடப்பாடு உள்ளவர்களாகவும் இருக்கும் ஒருவரே நாட்டின் பிரஜை என அழைக்கப்படுவார்.
பதினெட்டு வயதினைப் பூர்த்தி செய்த அனைவரும் வாக்குரிமை உடையவர்களாகக் கருதப்படுவர்.
தமது வாக்குரிமையை வெளிப்படுத்தும் உரிமை உடையவராகவும், தேருநர் இடாப்பில் பெயர் பதியப்பட்டு உத்தியோகபூர்வ வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பவராகவும் உரிய தேர்தல் நடவடிக்கைகளுக்குச் சமூகமளிக்கும் உரித்துடைய ஒருவரே வாக்காளராவார்.