தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

பெண்களிள் பிரதிநிதித்துவம்

இலங்கை கைச்சாத்திட்டுள்ள பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்ளையும் அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தின் மூலம் பெண்களின் சமமான அரசியல் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இலங்கையில் செயல்வலுவிலுள்ள சட்டதிற்கமைய பெண்களுக்கும், ஆண்களுக்குச் சமமான சந்தர்ப்பம் மற்றும் உரிமைகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் பெண்கள் இரண்டாம் தரப் பிரசைகளாக ஆக்கப்பட்டுள்ளனரென விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆணாதிக்க சமூகத்தினுள் ஆணாதிக்க சிந்தனை மற்றும் தீர்மானங்களுக்கிடையில் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைப்பதில்லையென்ற கருத்து தெரிவிக்கப்படுவதையும் அவதானிக்க முடியும். ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய நிகழ்ச்சித் திட்டங்களின் போது பெண்களின் உரிமை தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போதிலும் பெண்களின் அறிவு, மனப்பாங்கு மற்றும் திறமைகளை விருத்தி செய்து கொள்வதற்காக குறிப்பாக அரசியல் துறையில் பெண்களை வலுவூட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகுமெனவும், அதிலிருந்து குறிப்பிடத்தக்க பயன்கள் கிடைப்பதில்லையெனவும் ஆய்வறிக்கைகள் மூலம் தெரியவருகின்றது.

 

தற்போது இலங்கையில் மக்கள் பிரதிநிதிகள் நிறுவனங்களில் பெண்கள் பிரதிநிதித்துவம்

  • *
    இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் - 5.8%
  • *
    மாகண சபைகளில் - 0 %
  • *
    உள்ளூர் அதிகார சபைகளில் - 1.9%
  • ஆதலால் அரசியல் அடிப்படையில் பெண்களை வலுவூட்டல், உள்ளூரதிகார சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தம், உள்ளூரதிகார சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம், அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் முகவர்கள், பெண் தொழிற்படுனர்கள் ஆகியோரை அறிவுறுத்தும் நிகழ்சித் திட்டங்கள் தேர்தல் ஆணைக்குழுவினால நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

     

    இதன் கீழ் சனநாயகத்தின் அடிப்படைகள், சர்வசன வாக்குரிமை மற்றும் உள்ளூரதிகார சபைகள் தேர்தல் சட்டங்கள் தொடர்பாக நாடு பூராகவும் பரந்து வாழ்கின்ற பெண் தொழிற்படுனர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

     

    தேர்தல் ஆணைக்குழு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் ஒன்றிணைந்து பெண்களை அறிவுறுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்வதோடு, மாவட்ட மட்டத்தில் அதவாது அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களூடாக தேர்தல்கள் செயன்முறைகள், சனநாயகம், சர்வஜன வாக்குரிமை மற்றும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தம் தொடர்பாகவும் பெண்களின் அரசியல் பங்கேற்பு தொடர்பாகவும் பெண்களை அறிவுறுத்தும் செயலமர்வுகள் நாடு தழுவிய அடிப்படையில் நடாத்தப்படுகின்றன.

     

    உள்ளூர் அதிகார சபை பிரதிநிதித்துவத்துக்காக பெண்களுக்காக 25% ஒதுக்கீடு (Quota) அறிமுகம் செய்தல், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் இந்த செயலமர்வுகளின் போது கலந்துரையாடப்படுகின்றன