Election Commission, Election Secretariat, Sarana Mawatha, Rajagiriya, Sri Lanka. 10107
LOGO

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் : வாக்காளர்களுக்கு

 

Revision of Electoral Register 2021 - Click here for related FAQ

 

பதில்

தேருநர் இடாப்பு ஆரம்ப காலங்களில் தேர்தல் தொகுதி எல்லை நிருணயத்திற்கென நிறுவப்பட்ட எல்லை நிருணய ஆணைக்குழு பரிந்துரை செய்யுமிடத்து மாத்திரமே தயாரிக்கப்பட்டிருந்தன. ஆயினும் 1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர் பதிவுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, அப்பணிகள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றன. வருடாந்தம் மேற்கொள்ளப்படுகின்ற தேருநர் இடாப்பு மீளாய்வின் போது வதிவாளர்கள் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் உரிய பெயர்களை கணக்கெடுக்கின்ற (BC) படிவமொன்று யூன்/யூலை மாதங்களில் பகிர்ந்தளிக்கப்படும். இப்பணி பெரும்பாலும் கிராம அலுவலர்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் அதிக சனத்தொகையைக் கொண்டுள்ள கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபைப் பிரதேசங்களிலும் நீர்கொழும்பு மாநகர சபையின் சில பிரதேசங்களிலும் இப்பணி விசேட கணக்கெடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றது. தலைமைக் குடியிருப்பாளரினால் பூரணப்படுத்தப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை கணக்கெடுப்பு அலுவலர்கள் ஒன்று திரட்டி, ஒவ்வொரு பெயரையும் பரிசீலித்துப் பார்த்து, தமது பரிந்துரையை குறிப்பீடு செய்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்குக் கையளிப்பர். அதன் பின்னர் தேர்தல்கள் திணைக்களம் ஆவணங்களைப் பரிசீலித்து நடைமுறை இடாப்பிலிருந்து நீக்கப்படவேண்டியவர்களின் பெயர்களை உள்ளடக்கிய "அ" பட்டியல் (A List) மற்றும் புதிதாக உட்சேர்க்கப்படவுள்ள பெயர்களை உள்ளடக்கிய "ஆ" பட்டியல் (B List) என்பவற்றை தயாரித்து அதனை 28 நாட்கள் மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், பிரதேச செயலகம், கிராம அலுவலர் அலுவலகம், உள்ளூர் அதிகார சபை நிறுவனங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பரிசீலனைக்காக காட்சிப்படுத்தப்படும். இக்காட்சிப்படுத்தல் செப்தெம்பர் அல்லது ஒக்தோபர் மாதங்களில் 28 நாள் காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும். தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக் கொள்வதற்கென கணக்கெடுக்கப்படாத ஒருவருக்கு காணப்படுகின்ற உரிமையை அல்லது கணக்கெடுக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிரான ஆட்சேபனையை அந்த 28 நாட்களுக்குள் மாவட்டத்தின் பதிவு அலுவலருக்கு (மாவட்ட செயலாளருக்கு) அல்லது உதவிப் பதிவு அலுவலருக்கு மேலதிக / பிரதி / உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு) சமர்ப்பிக்க முடியும். இதன் பின்னா; உரிமைக் கோரிக்கைகள் ஆட்சேபனைகள் தொடர்பான விசாரணைகளை நடாத்தி தீர்மானங்களை எடுத்து, பெயர்ப் பட்டியலைக் கணனி மயப்படுத்தி, அடுத்த ஆண்டு மே மாதம் 31 அல்லது அதற்கு முன்னர் அத்தாட்சிப்படுத்துவர்.

2012 ஆம் ஆண்டில் இருந்து தேருநர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் உரிய ஆண்டிற்குள்ளேயே மேற்கொள்ளப்படுகின்றன.

பதில்

தேருநர் இடாப்பில் ஒருவரின் பெயரை உட்சேர்ப்பதற்கு பின்வரும் அடிப்படைத் தகைமைகளும் நியதிச் சட்டத் தகைமைகளும் காணப்படல் வேண்டும்.

I.   இலங்கைப் பிரசை ஒருவராய் இருத்தல்

II.  பிப்ரவரி மாதம் 01 ஆம் திகதிக்கு 18 வயதைப் பூர்த்தி செய்தவராய் இருத்தல்

III. பதிவு செய்வதற்கென எதிர்ப்பார்க்கின்ற முகவரியில் சாதாரண வதிவாளராக இருத்தல்.

IV.  சித்தசுவாதீனமற்றவரென நீதிமன்றமொன்றினால் தீர்மானிக்கப்பட்ட ஒருவராகக் காணப்படாமை

V.  இரண்டு வருடத்திற்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகின்ற ஒரு குற்றத்திற்குக் குற்றவாளியாகி அதில் 06 மாதங்களை அல்லது அதிலும் கூடிய காலத்தை சிறையில் கழித்தல் அல்லது சிறைத்தண்டனைக்கு ஆளாகி அதன் பின்னர் 07 ஆண்டுகளைக் கடக்காதவராய் இருத்தல்.

VI.  இலஞ்சக் குற்றச்சாட்டுக்குக் குற்றவாளியாகி 07 ஆண்டுகளைத் தாண்டாதவராயிருத்தல்.

VII. குடியுரிமை தகைமையினத்திற்கு உட்பட்ட காலப்பகுதி முடிவடைந்திருத்தல்.

இதற்கு மேலதிகமாக தேர்தல்கள் சட்டங்களை மீறல், பொது நிறுவனங்களின் (ஊழல் தவிர்ப்பு) கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாய் இருத்தல் தேர்தல்களில் மோசடியான நடத்தைகள், சட்டமுரணான பழக்கங்கள் என்பவற்றிற்குக் குற்றவாளியாதல் போன்ற பல தகைமையீனங்களும் உள்ளன.

உரிமைக்கோரிக்கை விசாரணையொன்றின் பின்னர், எவரேனும் ஒருவரின் பெயர் தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்பட்டிராவிடின் பதிவு அலுவலரின் தீர்மானத்திற்கு எதிரான ஆட்சேபனையொன்றை மாவட்ட நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கின்ற உரிமையுண்டு.

பதில்

இல்லை. ஒவ்வோர் ஆண்டிலும் தேருநர்கள் கணக்கெடுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஒருவரின் பெயர் அவர் வதிகின்ற வீட்டிற்கு கணக்கெடுக்கப்படல் கட்டாயமாகும். இல்லாவிடில் பட்டியலிலிருந்து அவரின் பெயர் நீக்கப்படும்.

பதில்

ஆம். தமது பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டிற்கான பிரித்தெடுப்புகையொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக உரிய மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பமொன்றுடன் 80/= ரூபாவையும் அவ்வாறு பிரித்தெடுப்புகையைக் கோருவதற்கான கடிதங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும். எவ்வாறாயினும் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தேருநர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையினால் தமது பெயரை உள்ளடக்கிய அச்சிடப்பட்ட பிரதியொன்றினைப் (PRINT OUT ) பெற்றுக் கொள்ள முடியும்.

பதில்

இல்லை. ஏனெனில் தற்போது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு உட்சேர்ப்பதற்காக வாக்காளர் பட்டியலின் பிரித்தெடுப்புகைகள் தேவைப்பட மாட்டா. ஆயினும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிலிருந்தும், கிராம அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் பெற்று உரிய பாடசாலைகளுக்கு சமர்ப்பிக்கப்படுமென்பதோடு அந்தந்த பாடசாலைகளின் பிரதானிகள் அவற்றின் உண்மைத்தன்மையைப் பரிசீலிப்பர்.

பதில்

முடியாது. அது குற்றமாகும். எனினும் ஒருவரிற்குப் பதிவு செய்யப்படுவதற்குத் தகைமையுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகள் காணப்பட முடியுமென்பதோடு, அவற்றில் ஒரு முகவரின் கீழ் மாத்திரமே பதிவு செய்து கொள்ள முடியும்.

பதில்

வாக்காளர் ஒருவராகப் பதிவு செய்யப்படுவதற்காக வதிவைக் கொண்டிருத்தல் இன்றியமையாததாகும். ஆதலால் உரித்துக் காணப்படுகின்றதென்ற ஒரே காரணத்திற்காக வாக்காளர் ஒருவராகப் பதிவு செய்யப்பட முடியாது. உரிய இல்லம் வாடகைக்கு வழங்கப்பட்டிருப்பின் உரித்தாளிக்கு அம்முகவரியின் கீழ் வாக்களார் இடாப்பில் பெயரைப் பதிவு செய்துகொள்ள முடியாது.  

பதில்

குறித்த ஆண்டு பிப்ரவரி மாதம் 01 ம் திகதி வதிவைக் கொண்டிருந்த இடத்தில் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்கு வாடகை வீடுகளின் குடியிருப்பாளர்களுக்குப் பூரண உரிமையுண்டு. அதனைத் தடுப்பதற்கு எவருக்கும் முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்கள் தொடர்பாக தேர்தல்கள் அலுவலகத்தை உடனடியாக அறிவுறுத்துதல் அவசியமாகும்.

பதில்

நேருநர் இடாப்பில் புதிதாக உட்சேர்க்கப்படுகின்ற மற்றும் நீக்கப்படுகின்ற பெயர்கள் காட்சிப்படுத்தப்படுகின்ற காலப்பகுதியில் சாதாரணமாக செப்தெம்பர், ஒக்தோபர் மாதங்களில் கிராம அலுவலர் அலுவலகங்கள், உள்ளூர் அதிகார சபை நிறுவனங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்கள் என்பவற்றில் செல்லுபடியான நடைமுறை இடாப்பு, அதிலிருந்து நீக்கப்படுகின்ற மற்றும் உட்சேர்க்கப்படவுள்ள பெயர்கள் என்பன காட்சிப்படுத்தப்படும். அத்தோடு அக்காலப்பகுதிக்குள் இணையத்தளத்தின் ஊடாக பெயர்ப்பட்டியலின் வரைபொன்றும் காட்சிப்படுத்தப்படும். தேர்தல் காலப்பகுதியொன்றாயின் இணையத்தளம், தேசிய தகவல் மையம் (1919) அல்லது Tell Commissioner மற்றும் முகநூல் என்பவற்றின் ஊடாகவும் தகவல்களைப் பெறமுடியும்.

பதில்

கட்டாயம் இல்லை. எனினும் ஒருவரின் வாக்கைப் பயன்படுத்தவதற்கு மேலதிகமாக அரசாங்கத்தின் வேறு தேவைப்பாடுகளுக்காகவும் பதிவேட்டில் பெயர் இருத்தல் பயனுள்ளதாக இருக்கும்.

பதில்

அவகாசம் உண்டு. வாக்காளர் கணக்கெடுப்பின் பின்னர் அவ்வாண்டின் செப்தெம்பர் / ஒக்தோபர் ஆகிய மாதங்களில் நடைமுறையில் உள்ள மேன்முறையீட்டு காலத்திற்குள் விண்ணப்பிப்பதன் மூலம் பெயரைப் பதிவு செய்துக்கொள்ள முடியும்

பதில்

இல்லை. எழுத்து மூலம் அதிகாரம் கையளிக்கப்பட்ட ஒரு முகவருக்கு அதில் கலந்து கொள்ள முடியும்.

பதில்

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் 01 ஆம் திகதி.

பதில்

ஆம். இது மேற்கொள்ளப்பட வேண்டியது வருடாந்தம் செப்தெம்பர் / ஒக்தோபர் மாதங்களில் " அ" (A) மற்றும் "ஆ" (B) பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படுகின்ற 28 நாள் காலப்பகுதிக்குள் ஆகும்.

பதில்

ஆம். தான் வெளிநாடு செல்கின்ற போது வதிவைக் கொண்டிருந்த முகவரியின் கீழ் வருடாந்தம் பதிவு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும். வெளிநாட்டு முகவரி மற்றும் கடவுச்சீட்டின் இலக்கம் என்பன கணக்கெடுப்புப் படிவத்தில் குறிக்கப்படல் வேண்டும்.

பதில்

ஆம். உங்களது பெயர் வாக்காளர் இடாப்பில் உட்சேர்க்கப்படாவிடத்து, ஒவ்வோர் ஆண்டு செப்தெம்பர் / ஒக்தோபர் மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மேன்முறையீட்டுக் கையேற்பின் போது உங்களுக்கு உரிமைக் கோரிக்கையொன்றை சமர்ப்பிக்க முடியும். வதிவொன்றின்றி எவரேனுமொருவரின் பெயரொன்று பதிவு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்டிருப்பின் அதற்கெதிராக ஆட்சேபனையொன்றையும் சமர்ப்பிக்கமுடியும். அத்தகைய கோரிக்கைகள், ஆட்சேபனைகள் தொடர்பாக விசாரணையொன்று நடாத்தப்படுமென்பதோடு, அவ்விசாரணையின் போது உங்களது கோரிக்கை நிராகரிக்கப்படுமிடத்து அதுபற்றி உங்களுக்கு அறிவிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்யமுடியும். ஆட்சேபனை விசாரணையொன்றின் போது ஆட்சேபனையை ஏற்றுக் கொண்டு பெயரொன்று நீக்கப்படுமிடத்து அவ்வாறு பெயர் நீக்கப்பட்டவருக்கும் சட்டத்தின் உதவியைக் கோரமுடியும்.