தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

தபால் வாக்கு

பொது விடயங்கள்

எவ்வகையான தரப்பினருக்கு அஞ்சல் வாக்கு வசதிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது?

  1. *
    தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகக் கருதப்படும் அரச ஊழியர்கள்
  2. *
    அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்
  3. *
    முப்படைகள், காவற்றுறை, சிவில் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் கீழ் நாடளாவிய ரீதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள்

அஞ்சல் வாக்காளரின் வசதிகள் கருதி அஞ்சல் வாக்கிற்கு விண்ணப்பிக்கும் ஒருவருக்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய முறைகள் யாவை?

  1. *
    சகல மாவட்ட செயலகங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தேர்தல் நடைபெறவிருக்கும் மாவட்டங்களிற்கு உரிய தேர்தல் இடாப்புக்கள்
  2. *
    சகல பிரதேச செயலகங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள குறித்த பிரதேச செயலகங்களுக்குரிய தேர்தல் இடாப்புக்கள்.
  3. *
    சகல கிராம அலுவலர் பிரிவுகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள குறித்த கிராம அலுவலர் பிரிவிற்கு உரிய தேர்தல் இடாப்புக்கள்.
  4. *
    தேர்தல் இடாப்புக்கள் மீளாய்வின் போது வீடு வீடாக விநியோகிக்கப்படும் பீசீ படிவத்தினுடன் காணப்படும் பற்றுச் சீட்டில் ஒட்டப்பட்டுள்ள வாக்காளர் இடாப்பின் குறித்த வீட்டிலக்கத்திற்குரிய வாக்காளர் பட்டியலின் மூலமும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
  5. *
    அரச தகவல் நிலையத்தின் 1919 ஆம் இலக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன், அங்கு குறிப்பிட்ட விண்ணப்பதாரியின் முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், வதிவிட மாவட்டம், கிராம அலுவலர் பிரிவு போன்ற விபரங்களைச் சமர்ப்பித்து வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கெடுப்பு மாவட்டம், தொடரிலக்கம் ஆகிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். 

அஞ்சல் வாக்காளர் ஒருவராகக் கருதப்படுவதற்கெனச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாத சந்தர்ப்பங்கள் அல்லது நிராகரிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் யாவை?

  1. *
    விண்ணப்பப் படிவத்தில் தமது நிருவாக மாவட்டத்தினைப் பிழையாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையால் நிராகரிக்கப்படலாம்.
  2. *
    அஞ்சல் வாக்காளராக விண்ணப்பிக்கத் தகுதியற்றவராக உள்ளமையால் நிராகரிக்கப்படலாம்.
  3. *
    விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களும் தேர்தல் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களும் முரண்பாடாக உள்ளமையால் நிராகரிக்கப்படலாம்.
  4. *
    விண்ணப்பப் படிவத்தில் வாக்காளருக்குரிய சரியான தொடரிலக்கம் குறிப்பிடப்படாமையால் நிராகரிக்கப்படலாம்.
  5. *
    விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரியின் கையொப்பம் இல்லாமையால் நிராகரிக்கப்படலாம்.
  6. *
    விண்ணப்பப் படிவத்தை உறுதிப்படுத்தும் அலுவலர் ஒருவரால் உறுதிப்படுத்திச் சமர்ப்பிக்கப்படாமையால் நிராகரிக்கப்படலாம்.
  7. *
    தெரிவத்தாட்சி அலுவலருக்கு விண்ணப்பப் படிவம் தாமதாமாகக் கிடைத்தமையால் நிராகரிக்கப்படலாம்.
  8. *
    தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தும் நோக்கம் இல்லாத சந்தர்ப்பமாக உள்ளமையால் நிராகரிக்கப்படலாம்.

அஞ்சல் வாக்கு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டமை அல்லது நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக அறிந்து கொள்ளுவது எவ்வாறு?

  1. *
    சகல அஞ்சல் வாக்கு விண்ணப்பங்கள் தொடர்பாகவும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டனவா அல்லது நிராகரிக்கப்பட்டனவா என அறிவிக்கும் கடிதத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
  2. *
    இவ்வாறு அறிவிக்கப்படும் கடிதம் உறுதிப்படுத்தும் அலுவலருக்குரிய பிரதியுடன், சகல விண்ணப்பதாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
  3. *
    தேவைப்படும் பட்சத்தில் குறித்த கடிதத்தின் பிரதியொன்று வாக்காளரின் சொந்த முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும்.

அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சமூகமளித்திருக்கக் கூடியவர்கள் யாவர்?

  1. *
    அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் கடமையில் ஈடுபடவிருக்கும் பணிக்குழுவினர் சமூகமளித்திருக்கலாம்.
  2. *
    தேர்தலில் போட்டியிடவிருக்கும் அபேட்சகர் ஒருவரின் தேர்தல் முகவர் அல்லது அங்கீகாரம் பெற்ற முகவர் அல்லது நியமிக்கப்பட்ட முகவர் ஒருவர் சமூகமளித்திருக்கலாம்.

அஞ்சல் வாக்குச் சீட்டொன்றை விநியோகிப்படுவதனை நிராகரிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் யாவை?

  1. *
    அஞ்சல் வாக்காளர் இடாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பெயர்கள் ஒருவருக்கே உரியது எனக் காணப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது வேறோர் வகையில் பிழையானவை என உறுதிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் நிராகரிக்கப்படலாம்.

அஞ்சல் வாக்குச் சீட்டு அடையாளமிடுதல் தொடர்பாக இரகசியம் பேணல் படிவத்தில் கையொப்பமிடுவதற்குத் தகைமையுடையவர்கள் யாவர்?

  1. *
    அஞ்சல் வாக்குகளை உறுதிப்படுத்தும் அலுவலர்கள் கையொப்பமிடலாம்.
  2. *
    அஞ்சல் வாக்குகளை உறுதிப்படுத்தும் அலுவலர்கள் / தெரிவத்தாட்சி அலுவலர் அல்லது உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் அல்லது தங்களால் கையொப்பமிடலாம்.

அஞ்சல் வாக்குப் பணிகளில் ஈடுபடும் பணிக்குழுவினருக்கான பொது விடயங்கள்

அஞ்சல் வாக்கினை அடையாளமிடுவதற்காகக் குறித்த திகதியில் அல்லது திகதிகளில் தமது வாக்கினை அடையாளமிடத் தவறிய அஞ்சல் வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பொதிகளை (Pஏ-னு உறைகள்) யாது செய்தல் வேண்டும்?

மறுதினமே குறித்த அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல் அலுவலகத்தில் கையளித்தல் வேண்டும்.

அதற்காகப் பயன்படுத்தப்படும் படிவம் யாது?

PV/RT படிவம்

தெரிவத்தாட்சி அலுவலரால் சகல அஞ்சல் வாக்காளர்களுக்கும் (அவர் ஒரு உறுதிப்படுத்தும் அலுவலராக இருந்தால் அவர் மூலமாக அல்லது உறுதிப்படுத்தும் அலுவலராக இல்லாவிடில் அவரது விண்ணப்பத்தை உறுதிப்படுத்தும் அலுவலர் மூலமாக) அனுப்பி வைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை?

  1. *
    வாக்குச் சீட்டு
  2. *
    விநியோகிக்கப்பட்ட வாக்குச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ள இலக்கத்தினைக் குறிப்பிட்டுள்ள ஆளடையாளக் கூற்றுப் படிவம்.
  3. *
    "பீ" உறை - அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டினை இடுவதற்காகப் பயன்படுத்தப்படும் உறை. (விநியோகிக்கப்பட்ட வாக்குச் சீட்டின் இலக்கம் குறிப்பிடப்பட்டிருக்கும்.)
  4. *
    "ஏ" உறை - விண்ணப்பதாரி வாக்களித்த பின்னர் குறித்த ஆவணங்களைத் தெரிவத்தாட்சி அலுவலருக்கு மீண்டும் அனுப்பி வைப்பதற்காக தெரிவத்தாட்சி அலுவலரின் முகவரி மற்றும் அஞ்சல் வாக்காளரின் தொடரிலக்கம் ஆகியவை எழுதப்பட்ட உறை.
  5. *
    மீண்டும் அனுப்பப்படவுள்ள ஆவணங்கள் அடங்கிய "ஏ" உறைக்கான ஸ்டிக்கர். (சாம்பர் நிறம்)

உறுதிப்படுத்தும் அலுவலரின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் யாவை?

  1. i
    உறுதிப்படுத்தும் அலுவலரின் மேற்பார்வையின் கீழ் கடமையிலீடுபட்டுள்ளவர் தகுதி பெற்ற அஞ்சல் வாக்காளருக்குரிய விண்ணப்பத்தை உறுதிப்படுத்துதல் வேண்டும். (விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விபரங்களை மீள்பரிசீலனை செய்யும்போது திருத்தங்கள் மேற்கொள்வதாயின் அவ்விடத்தில் உறுதிப்படுத்தும் அலுவலர் கையொப்பமிடல் வேண்டும்.) தங்களால் உறுதிப்படுத்தப்படும் அஞ்சல் வாக்கு விண்ணப்பப் படிவத்தினைச் சமர்ப்பித்துள்ளவர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதியுடையவர் என்பதிலும் விண்ணப்பதாரியின் ஆளடையாளம் தொடர்பாகவும் உறுதிப்படுத்தும் அலுவலர் திருப்தியடைதல் வேண்டும்.
  2. ii
    அன்றாடம் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் உறுதிப்படுத்தப்பட்டு உடனடியாகக் குறித்த தெரிவத்தாட்சி அலுவலருக்குத் தபாலிலோ அல்லது நேரடியாகவோ கையளித்தல் வேண்டும்.  உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை குறித்த காலப்பகுதியினுள் அனுப்பி வைப்பது உறுதிப்படுத்தும் அலுவலர்களின் முக்கிய பொறுப்பாகும்
  3. iii
    தங்களால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களைக்  குறிப்பேட்டில் (ஜர்னலில்) குறித்து வைத்தல் வேண்டும்.  குறிப்பேடு கிடைக்கத் தாமதமடையும் பட்சத்தில், தம்மால் உறுதிப்படுத்தப்படும் விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை சீஆர் புத்தகமொன்றில் குறித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்
  4. iv
    விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டமை அல்லது நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தெரிவத்தாட்சி அலுவலரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களுள் அஞ்சல் வாக்காளருக்குரிய பிரதியை தாமதமின்றி அவருக்குக் கையளித்தல் வேண்டும்
  5. v
    உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களுக்கான காப்புறுதி செய்யப்பட்ட பொதிகளைப் பாதுகாப்பான இடத்தில் களஞ்சியப் படுத்துவதற்கும், வாக்களிப்பதற்குக் குறித்த திகதியில் வாக்காளர் தமது வாக்கை அடையாளமிட்ட பின்னர் அன்றைய தினமே காப்புறுதித் தபாலில் குறித்த தெரிவத்தாட்சி அலுவலருக்கு மீண்டும் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் வேண்டும்
  6. vi
    வாக்குச் சீட்டினை அடையாளமிடும் திகதியில் அதனைக் கண்காணிப்பதற்காக போட்டியிடும் கட்சி அல்லது குழுவினரின் முகவர்களுக்கு அழைப்பு விடுத்தல் வேண்டும்
  7. vii
    தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தினங்களிலும் தமது வாக்கினை அடையாளமிடுவதற்காக வருகை தராத அஞ்சல் வாக்காளரின் ஆவணப் பொதிகளை மறுதினமே தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கையளித்தல் வேண்டும்
  8. viii
    உறுதிப் படுத்தும் அலுவலரின் குறிப்பேட்டினை (ஜர்னலை) தெரிவத்தாட்சி அலுவலரின் ஆலோசனையின் பிரகாரம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்

உறுதிப் படுத்தும் அலுவலரின் குறிப்பேட்டினை (ஜர்னலை) தெரிவத்தாட்சி அலுவலரின் ஆலோசனையின் பிரகாரம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்

  1. *
    முகவர்கள் வருகை தருவதற்காக அறிவிக்கப்பட்ட குறித்த நேரம் கடந்தவுடன் தமது கடமைகளை ஆரம்பித்தல் வேண்டும்.
  2. *
    அதற்கு முன்னர் வருகை தந்துள்ள முகவர்களின் நியமனக் கடிதத்தினைப் பரீட்சித்து வருகையைக் குறித்துக் கொள்ளல் வேண்டும்
  3. *
    அஞ்சல் வாக்கு வெற்றுப் பெட்டிகளை முகவர்களுக்குக் காண்பித்து அவர்கள் முன்னிலையில் அதனைப் பொறியிடல் வேண்டும்
  4. *
    விநியோக நிலையத்திற்குத் தேவைப்படும் சகல விடயங்களையும் முன்கூட்டியே ஆயத்தம் செய்து கொள்ளல் வேண்டும்
  5. *
    வாக்குச் சீட்டு விநியோகத்தினை கண்காணிப்பதற்காக வருகை தரும் முகவர்களுக்கு அதனைப் பார்வையிடுவதற்காகச் சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும்
  6. *
    உதவித் தெரிவத்தாட்சி அலுவலரினால் பணிக்குழுவினரதும், முகவர்களினதும் "இ" படிவத்தில் குறிப்பிடப்பட்ட இரகசியம் பேணல் வெளிப்படுத்துகைகளைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்
  7. *
    பின்னர் வாக்குச் சீட்டு விநியோகத்தை ஆரம்பிக்க முடியும். வாக்களிப்பு நிலையமொன்றில் நடைபெறுவது போன்று இங்கேயும் அஞ்சல் வாக்காளரின் தொடரிலக்கம் மற்றும் பெயர் என்பவற்றை உரத்து வாசித்தல் வேண்டும்
  8. *
    இங்கு வாக்காளரின் தொடரிலக்கம் என்பது, ஒவ்வோர் வாக்கெடுப்புப் பிரிவுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்காளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தொடரிலக்கமாக அமைந்திருக்கும்

அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகள் தொடர்பாக உறுதிப்படுத்தும் அலுவலருக்கு உரித்தான பொறுப்புக்கள் யாவை?

  1. *
    தமது பெயருக்குக் கிடைத்திருக்கும் தபால்கள் திறக்கப்படாமல் தம்மிடம் நேரடியாகக் கையளித்தல் வேண்டுமென, தமது அலுவலகத்தில் அல்லது நிறுவனத்தில் தபால் பகுதிக்குப் பொறுப்பான அலுவலருக்கு உறுதிப்படுத்தும் அலுவலர் அறிவித்தல் வேண்டும்
  2. *
    தமக்குக் கிடைக்கப் பெற்ற காப்புறுதி செய்யப்பட்ட தபால் பொதிகளைப் பாதுகாப்பாக களஞ்சியப் படுத்துதல் வேண்டும்
  3. *
    வாக்குச் சீட்டு அடையாளமிடப்படுவதற்கு நியமிக்கப்பட்ட திகதிகள் இரண்டிலும் அஞ்சல் வாக்குகளை அடையாளமிடுவதற்கு அழைக்கப்படவுள்ள வாக்காளர்களின் பெயர்களைத் தீர்மானித்து முன்கூட்டியே அவர்களுக்கு அறிவித்தல் வேண்டும்
  4. *
    இந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு முகவர் வீதம் சமூகமளிக்கலாம் என கட்சிச் செயலாளர்களுக்கும், அங்கீகாரம் பெற்ற முகவர்களுக்கும், சுயேச்சைக் குழுத் தலைவர்களுக்கும் அறிவித்தல் வேண்டும்
  5. *
    அஞ்சல் வாக்காளராகச் சமூகமளித்துள்ளவரது வாக்குச் சீட்டு அடங்கிய பொதியைத் திறப்பதற்கு முன்னர் அவரது தேசிய அடையாள அட்டையின் பிரகாரம் அவரது ஆளடையாளம் நிரூபிக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்
  6. *
    வாக்குச் சீட்டினை இரகசியமாக அடையாளமிடுவதற்கு வாக்காளருக்குச் சந்தர்ப்பம் அளித்தல் வேண்டும்
  7. *
    அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டின் இரகசியம் பேணப்படும் வகையில் அஞ்சல் வாக்காளரின் முன்னிலையிலேயே உரிய உறைகளில் இடப்பட்டு, பொறியிட்ட பின்னர் அன்றைய தினமே உரிய தெரிவத்தாட்சி அலுவலருக்கு காப்புறுதி செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பி வைப்பதற்காக தபாற்கந்தோரில் கையளித்தல் வேண்டும்.  இது சம்பந்தமாக ஏற்கெனவே தபாற்கந்தோருடன் தொடர்பு கொண்டு ஆவன செய்தல் வேண்டும்
  8. *
    இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அரசியற் கட்சிகளாலும் மற்றும் சுயேச்சைக் குழுக்களாலும் நியமனம் செய்த முகவர்களுக்கும், தேர்தல் கண்காணிப்பாளர்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும்
  9. *
    தெரிவத்தாட்சி அலுவலரினால் இந்த வாக்குச் சீட்டு அடையாளமிடும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பெயர் குறித்து அனுப்பி வைக்கப்படும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும்

அஞ்சல் வாக்குக் கடமைகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கும்  அரசியற் கட்சிகளுக்குமான பொது விடயங்கள்

அஞ்சல் வாக்குகள் அடையாளமிடப்படும் விசேட தினங்களில் உறுதிப்படுத்தும் அலுவலர் ஒருவரின் அலுவலகத்திற்கென ஒரு அபேட்சகர் சார்பாக முகவர்கள் எத்தனை பேரை நியமிக்க முடியும்?

இரண்டு பேர் மாத்திரமே

இந்த நியமனம் யாரால் மேற்கொள்ளப்படல் வேண்டும்?

கட்சி செயலாளர் / அங்கீகரிக்கப்பட்ட முகவர் அல்லது சுயாதீன குழு

கட்சிச் செயலாளர் அல்லது அங்கீகாரம் பெற்ற முகவர் அல்லது குழுத் தலைவரால்  மாத்திரமே மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அஞ்சல் வாக்குக் கடமைகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கும் அரசியற் கட்சிகளுக்கும்  கண்காணிப்புக் குழுக்களுக்குமான பொது விடயங்கள்

தேர்தல் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்களின் குழுவில் உள்ள ஒரு அங்கத்தவர் வீதம் பங்குபற்ற முடியும்

அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் அடையாளமிடப்படும் தினத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டிய தேவைகள் என்ன?

  1. *
    அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் அடையாளமிடப்படும் அலுவலகத்தில் எந்தவொரு கட்சியினதும், குழுக்களினதும் நிறங்கள் அடங்கிய அலங்காரங்கள் எதுவும் காட்சிப்படுத்தலாகாது
  2. *
    தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சியினதும் அபேட்சகரினதும் பிரச்சார அறிவித்தல்கள், கொடிகள், கட்அவூட்கள், படங்கள் என்பனவும் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான எதுவும் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும்
  3. *
    அஞ்சல் வாக்காளர் தமது வாக்கினை இரகசியமாக அடையாளமிடுவதற்கும் அதனை வேறெவருக்கும் காட்டுதல் அல்லது காட்சிப்படுத்துதல் என்பவற்றைத் தவிர்த்து எதுவித தடைகளுமின்றி சுதந்திரமாக தனது வாக்கினை அடையாளமிடுவதற்கும் போதிய அவகாசம் வழங்குதல் வேண்டும்
  4. *
    பொதிகள், சுடுகலன்கள் என்பன அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் இடத்திற்குக் கொண்டு செல்லல் முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும்
  5. *
    அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் அலுவலகத்தில் கடமையாற்றும் அலுவலர்கள் தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்லது குழுவின் அபேட்சகர் ஒருவரை அலுவலகத்தினுள் உட்செல்ல அனுமதிப்பதற்கோ அல்லது அவ்வாறானவர்களுடன் உறவாடுவதற்கோ இடமளித்தலாகாது
  6. *
    அஞ்சல் வாக்குகள் அடையாளமிடப்படும் இடத்தில் சமூகமளித்திருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள குறித்த கடமைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும்  பணிக்குழுவினர் தேர்தல் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள உள்ளூர் கண்காணிப்புக் குழுவின் அங்கத்தவர்கள் இக்கடமைகளை மேற்பார்வை செய்யவிருக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தவிர்ந்த வேறெவரும் அஞ்சல் வாக்கு அடையாளமிடப்படும் இடத்திற்குச் செல்ல இடமளித்தலாகாது
  7. *
    அஞ்சல் வாக்குகள் அடையாளமிடப்படும் அலுவலகத்தில் உள்ள சகல அஞ்சல் வாக்காளர்கள் தொடர்பாகவும் தயாரிக்கப்பட்ட முறையான ஆவணங்கள் மூலம் அவர்களது  ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதலும் அவர்களுக்குரிய காப்புறுதி செய்யப்பட்ட பொதிகளைத் தெரிந்தெடுக்கும் வகையிலான ஒழுங்கு முறையான செயற்பாடுகளையும் கடைப்பிடித்தல் வேண்டும்
  8. *
    அஞ்சல் வாக்காளர் அடையாளமிட்ட வாக்குச் சீட்டினை "பீ" உறையினுள் இட்டு அதனை வாக்காளர் முன்னிலையிலேயே ஒட்டி அத்துடன் அஞ்சல் வாக்காளரது கையொப்பமிடப்பட்ட ஆளடையாளக் கூற்றினை உறுதிப்படுத்தும் அலுவலர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்திய பின்னர், அவற்றையும் "ஏ" உறையிலிட்டு நன்றாக ஒட்டிய பின்னர், அதன் மீது சாம்பல் நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அப்பொதிகளை தபாற்கந்தோரில் கையளித்தல் வேண்டும்.  இந்த காப்புறுதி செய்யப்பட்ட பொதிகள் தபாற்கந்தோரில் கையளித்த பின்னர் அதனை உறுதிப்படுத்தும் வகையில் பற்றுச்சீட்டுக்கள்  பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும்