தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள்

தேர்தல் சட்டங்கள் என்றால் என்ன?

தேர்தலொன்றை நீதியாகவும் மற்றும் சுதந்திரமாகவும் நடாத்துவதற்குத் தேவையான அதிகாரங்கள் மற்றும் ஒழுங்குகள் மற்றும் செயன்முறைகள் என்பன தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இலங்கையில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்கள் யாவை?

(1)  இலங்கை அரசியல் யாப்பு

(2)  1946 ஆம் ஆண்டின் அரச கட்டளைச் சட்டத்தின் தற்போது வலுவில் உள்ள பகுதிகள்

(3)  1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம்

(4)  1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல் சட்டம்

(5)  1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்புச் சட்டம்

(6)  1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம்

(7)  உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் (262 ஆம் அத்தியாயம்)

(8)  1946 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் ( இது வரை 17 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.)

(9)  2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்த) கட்டளைச் சட்டம்

(10) 2016 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்த) கட்டளைச் சட்டம்

 

1. 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல் சட்டம்

(அ). தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து "16 நாட்களுக்குக் குறையாத மற்றும் 21 நாட்களுக்கு மேற்படாத" வேட்புமனுச் செய்யும் தினமாகவும்,

(ஆ) வேட்புமனுத் தினத்திலிருந்து "நான்கு வாரங்களுக்குக் குறையாத மற்றும் ஆறு வாரங்களுக்கு மேற்படாத" தினமொன்றை தேர்தல் நடாத்தப்படும் தினமாக தேர்தல்கள் ஆணையாளரினால் விதிக்கப்படல் வேண்டும்.

 

2. 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம்

சனாதிபதி அவர்களால் பாராளுமன்றம் கலைக்கப்படுகின்ற அறிவித்தலில் வேட்புமனுக் காலக்கெடு மற்றும் தேர்தல் தினம் குறிப்பிடப்படும்.

 

3. 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம்

(அ). தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்புமனுத் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்ட தினத்தின் பின்னர், வருகின்ற 14 ஆம் தினத்தில் ஆரம்பித்து அவ்வறிவித்தல் வெளியிடப்பட்ட தினத்தின் பின்னர் வருகின்ற 21 ஆவது தினம் நண்பகல் 12.00 மணிக்கு வேட்புமனுக் காலக்கெடு நிறைவடையும்.

(ஆ). வேட்புமனுக் கையேற்கப்பட்டதன் பின்னர், போட்டியொன்றுள்ள ஏதேனும் நிருவாக மாவட்டமொன்று தொடர்பில் தெரிவத்தாட்சி அலுவலரால் தேர்தல் தொடர்பான அறிவித்தலொன்று வெளியிட வேண்டுமென்பதோடு, அத்தினத்திலிருந்து "ஐந்து வாரங்களுக்குக் குறையாத மற்றும் எட்டு வாரங்களுக்கு மேற்படாத" ஏதேனும் தினமொன்றாகிய "சனிக்கிழமை தினமொன்றை" தேர்தல் நடாத்தப்படும் தினமாக வெளிப்படுத்துதல் வேண்டும்.

 

4. உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் (262 ஆம் அத்தியாயம்)

(அ). மாவட்டத்தின் தேர்தல் அலுவலரினால் தேர்தலொன்றை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அறிவித்து அறிவித்தலொன்றை வெளியிட்ட தினத்திற்குப் பின்னர், வருகின்ற 14 ஆம் தினத்தில் ஆரம்பமாகி 21 ஆம் தினம் நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் காலக்கெடுவினுள் வேட்புமனுக் கையேற்கும் காலக்கெடுவென அறிவித்தலில் குறிப்பிடுதல் வேண்டும்.

 

5. 1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்புச் சட்டம்

(அ) வர்த்தமானியில் வெளியிடப்படுகின்ற வெளிப்படுத்துகையொன்றினூடாக மக்கள் தீர்ப்பொன்றை நடாத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சனாதிபதி அவர்கள் உத்தரவிடுகின்ற சந்தர்ப்பமொன்றில் அந்த "வெளிப்படுத்துகை தினத்திலிருந்து முப்பது தினங்களுக்கு முற்படாத தினமொன்றில்" மக்கள் தீர்ப்பை நடாத்துதல் வேண்டும்.

      சனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கு, மாகாண சபைகளுக்கு மற்றும் உள்ளூர் அதிகார சபைகளுக்கு முகவர்களை நியமனம் செய்தல் மற்றும் தேருநர்களைக் கணக்கெடுத்தலின் பின்னர், வருடாந்தம் தேருநர் இடாப்பைத் தயாரித்தல் ஆகிய இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசியலமைப்பு மற்றும் தேர்தல்கள் சட்டங்களின் கீழ் தேர்தல்கள்  ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது. தேர்தல்களோடு தொடர்புடைய சட்டங்கள் மற்றும் நிபந்தனைகளைச் செயற்படுத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் அலுவல்கள் மாற்றமடையாத, அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்ற ஒத்த தன்மை கொண்டவையாகக் கருதப்படும். வெவ்வேறு காரணங்களால் தற்போது இம்மன நிலையை மாற்றுவதற்கான காலம் ஏற்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு விகிதாசார பிரதிநிதித்துவ முறையோடு புதிய தேர்தல் சட்டங்களை அறிமுகப்படுத்தியதன் பெறுபேறாக அனைத்து தேர்தல்களும் ஒரே தினத்தில் நடாத்தப்படுகின்ற தேர்தலொன்றாகியதோடு, தேர்தல் எப்போதும் ஒவ்வொரு 15 மாதங்களுக்கும் ஒரு தடவை நடாத்துவதற்கு தயாராக இருக்கும் நிலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது. சனநாயக நிருவாகத்தின் அடிப்படை தேவைப்பாடொன்றான சனநாயக தேர்தல் செயற்பாடுகளை அடைந்து கொள்வதில் அரசியற் கட்சிகள், வேட்பாளர்கள், பொது மக்கள், சிவில் அமைப்புக்களாகிய தேர்தல் சட்டங்களோடு தொடர்புடைய அனைத்து மட்டத்தினரும் ஆர்வமொன்றைக் காட்டுகின்றனர். அதன் காரணமாக தேர்தல் சட்ட அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றவாறு தேர்தல் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்குக் காரணமாக அமையும் எந்தவொரு நடவடிக்கையையும் தேசிய முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படும்.

       இதற்கு மேலதிகமாக  இதனுடன் தொடர்புடைய வேறு சட்டங்கள் மூலமும் சிற் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.- உ+ம்- 1987 இன் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டம்