தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - அரசியல் கட்சிகள்

(i)    விண்ணப்பப்படிவத்தோடு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென பணிக்கப்பட்டுள்ள அனைத்து எழுத்தாவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருத்தல்

(ii) ஆணைக்குழுவினால் அழைக்கப்படுகின்ற பரிசீலனைக்கு கட்சியின் பிரதான பதவிதாங்குநர்கள் (பெண் அலுவலர் அடங்கலாக) கலந்துகொள்ளல்

(iii)  அக்கட்சி ஓர் அரசியல் கட்சியென ஆணைக்குழு திருப்தியடைதல்

(iv) அக்கட்சிக்கு 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் கீழ் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான சாத்தியப்பாடுகளை கொண்டுள்ள ஒரு கட்சியென ஆணைக்குழு திருப்தியடைதல்.

(v)

(அ) அக்கட்சி கோரிக்கையை சமர்ப்பிக்கும் திகதிக்கு ஆகக் குறைந்தது 4 வருடங்களுக்கு முன்னரிருந்து தொடர்ச்சியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதென, அல்லது

(ஆ) அக்கட்சியினால் பெயர் குறிக்கப்படுகின்ற இரண்டு வேட்பாளர்களில் ஆகக் குறைந்தது ஒரு வேட்பாளர் அக்கட்சியினால் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் நடாத்தப்பட்ட கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வெற்றியீட்டியுள்ளாரென, அல்லது

(இ) அக்கட்சியினால் வெவ்வேறுபட்ட (05) மாகாண சபைக்கு பெயர் குறிக்கப்பட்ட ஆகக் குறைந்தது 5 வேட்பாளர்களில் ஆகக் குறைந்தது மூவர் (03)அக்கட்சியினால் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட தினத்திற்கு முன்னர் நடாத்தப்பட்ட கடந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்களென ஆணைக்குழு திருப்தி அடைதல் வேண்டும்.

(i)  அங்கீகரிக்கபட்ட ஓர் அரசியல் கட்சியாக கணிக்கப்படுவதற்கு அக்கட்சி உரித்துப்பெற்ற தினத்திலிருந்து 03 மாத காலத்தினுள் அக்கட்சியின் யாப்பின் பிரதி, கட்சியின் பதவி தாங்குனர்களின் பெயர் பட்டியல், அக்கட்சியின் அரசியல் நிகழ்சித் திட்டம் என்பவற்றை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii)  பதிவு செய்யப்பட்ட கணக்காய்வாளரொருவரினால் கணக்காய்வு செய்யப்பட்ட ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளதும் வருடாந்த கணக்கு வெளிப்படுத்துகை கூற்றின் ஒரு பிரதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

(iii)  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் அதன் யாப்பு திருத்தம் செய்யப்படுகின்ற போது அத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட தினத்திலிருந்து முப்பது (30) நாட்கள் கழிவதற்கு முன்னர் அத்திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் வேண்டும்.

(iv)  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் அதன் பதவி தாங்குநர்களை மாற்றம் செய்கின்ற சந்தர்பங்களின் போது அம்மாற்றம் மேற்கொள்ளப்பட்ட தினத்திலிருந்து முப்பது (30) நாட்கள் கழிவதற்கு முன்னர் அம்மாற்றம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் வேண்டும்.

(v)  ஒவ்வோர் அரசியல் கட்சியினாலும் வருடத்தில் ஒரு தடவை அல்லது அக்கட்சியின் யாப்பில் குறித்துரைத்துக் காட்டப்பட்டுள்ளவாறு பொதுச் சபைக் கூட்டம் நடாத்தப்படல் வேண்டும். அக்கூட்டத்தில் பின்பற்றி ஒழுக வேண்டிய செயலொழுங்குகள் அவ் யாப்பின் குறித்துரைத்துக் காட்டப்பட்டிருத்தல் வேண்டும்.

(vi)  அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையான அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்து அமைக்கப்பட்ட கூட்டணியொன்றெனில் கூட்டு சேர்க்கப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மற்றும் அந்த பதவிதாங்குநர்களின் பெயர்களை ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் வேணடும்.

(i)  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 8ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு இசைவாக செயற்படுவதிலிருந்து தவறுகின்ற சந்தர்ப்பமொன்றில்

(ii)  தொடர்ச்சியாக இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களுக்கு அக்கட்சியிலிருந்து ஒரு வேட்பாளர் கூட பெயர் குறிக்கப்படாத போது