தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

வாக்காளர் தினம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் பிரகாரம் மக்கள் இறைமையை உறுதிப்படுத்துகின்ற சர்வஜன வாக்குரிமையைப் பேணும் நோக்குடன், வாக்காளராகத் தகைமை பெற்ற அனைத்து இலங்கையர்களினது பெயர்களையும் தேருநர் இடாப்பில் பதியப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் அத்தியாவசியமானது.  தேருநர் இடாப்பில் பெயர்களைப் பதிவதற்கான அடிப்படைத் தகைமைகள் தொடர்பாகவும், தேருநர் இடாப்பில் பெயர்களை உட்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் நாடளாவிய ரீதியில் பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக வருடந்தோறும் பிப்ரவரி மாதம் முதலாந் திகதியை வாக்காளர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, கடந்த பல வருடங்களாக தேர்தல் திணைக்களத்தினால் / தேர்தல் ஆணைக்குழுவால் பல செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

 

2013 ஆம் ஆண்டில் தேருநர் இடாப்பு மீளாய்வின் போது "வாக்கு உங்களது உரிமையாகும்" என்னும் தொனிப்பொருளுடனும், 2014 ஆம் ஆண்டில் "வாக்கு உங்களது உரிமையாகும்.  உங்களது சக்தியாகும்" என்னும் தொனிப்பொருளுடனும், 2015 ஆம் ஆண்டில் "சர்வஜன வாக்குரிமையை சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் பயன்படுத்துவதனால் மாத்திரமே மக்கள் இறைமை உண்மையான முறையில் செயற்படுத்தப்படும்" என்னும் தொனிப்பொருளுடனும், 2016 ஆம் ஆண்டில் "வாக்காளராவதில் எவரும் விடுபடாதவாறு மேற்கொள்ளப்படும் செயல்முறை" என்னும் தொனிப்பொருளுடனும், 2017 ஆம் ஆண்டில் "வாக்கு உங்கள் உரிமையாகும்.  அதனிலும் விட அது உங்கள் பொறுப்பாகும்."  என்னும் தொனிப்பொருளுடனும் வாக்காளர் தினம் நடாத்தப்பட்டது.

 

வாக்காளராவதற்குரிய அடிப்படைத் தகைமைகளாகக் கருதப்படும் விடயங்களாக ஒருவர் இலங்கைப் பிரஜையாக இருத்தல், 18 வயதினைப் பூர்த்தி செய்தல் என்பவற்றுடன், தேருநர் இடாப்பில் பெயர் பதிவதற்காக விண்ணப்பிக்கும் முகவரியானது ஒருவரது வசிப்பிடமாக இருத்தல் வேண்டும் என்பதும் அத்தியாவசியமாகின்றது.  இந்த விடயங்கள் பிப்ரவரி மாதம் முதலாம் திகதியின்று பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஆகையால் வாக்காளர் தினத்தில் தேருநர் இடாப்பு மீளாய்வு தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவூட்டும் செயற்றிட்டங்களுக்கு அனைவரது ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 

இதன் பிரகாரம் அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர்களுக்குத் தெளிவூட்டும் நிகழ்ச்சிகள் மாவட்ட ரீதியாக நடாத்தப்படுவதுடன், அனைத்து அரச அலுவலர்கள் மற்றும் சனசமூக அங்கத்தவர்கள் ஆகியோரது அனுசரணையும், ஒத்துழைப்பும் பெறப்படுகின்றது.  சொற்பொழிவுகள், வீதி நாடகங்கள் நடாத்துதல், பெனர்கள், சுவரொட்டிகள் காட்சிப்படுத்துதல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், பாடசாலை மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் நடாத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தேருநர் இடாப்பு மீளாய்வின் முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவூட்டப்படுகின்றது.

 

வாக்காளர் தினம் தொடர்பாக, நாடளாவிய ரீதியில் பொதுமக்களுக்குத் தெளிவூட்டும் நிகழ்ச்சித் தொடர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்றன.

    1. *
      அனைத்து பிரதேச செயலகங்களும் உள்ளடங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகின்ற அறிவித்தல்கள், பெனர்கள் காட்சிப்படுத்துதல் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்குத்  தெளிவூட்டப்படுகின்றது.
    2. *
      நடைபவனிகள் நடாத்தப்படுவதன் மூலம் தேருநர் இடாப்பின் முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவூட்டப்படுகின்றது.
    3. *
      பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் நடாத்துதல்.
    4. *
      குறுந்திரைப்படங்கள் காட்சிப்படுத்துதல்.
    5. *
      பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்களை ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்துதல்
    6. *
      மக்கள் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள், தனியார் பேரூந்துகள் போன்றவற்றில் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல்.
    7. *
      டீஜிடல் முறையிலான பெயர்ப்பலகைகள், டிஜிடல் திரைகள் போன்றவற்றில் தேருநர் இடாப்பின் முக்கியத்துவம் பற்றிய செய்தியை ஒளிபரப்புச் செய்தல்.
    8. *
      தேருநர் இடாப்பின் முக்கியத்துவம் தொடர்பான விடயங்கள் உள்ளடங்கிய மேடை நாடகங்கள், வீதி நாடகங்கள் அரங்கேற்றுதல்.
    9. *
      தேருநர் இடாப்பின் முக்கியத்துவம் தொடர்பான செய்திகளை முரசொலி இசைக் கலைஞர்களினால் வாசித்து வெளிப்படுத்துதல்.
    10. *
      கேபல் தொலைக்காட்சி மூலமாக பிரச்சாரம் செய்தல், செய்தித்தாள்களில் பிரச்சாரம் செய்தல்.
    11. *
      தொழில்நுட்பக் கல்லூரிகள், இளைஞர் மன்றங்களில் பயிலும் பயிலுநர் மாணவர்கள், தொழிற்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், சிவில் அமைப்புக்கள், சனசமூக அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் தெளிவூட்டல்கள் வழங்குதல்