தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

தேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புக்கள்

வாக்குரிமை சம்பந்தமான மிக முக்கியமானதும், மிகத் தெளிவானதுமான ஒரு சில நீதிமன்றத் தீர்ப்புக்கள் உள்ளன.  தேர்தல் மனுக்கள் மூலமும், தேர்தல் சட்டங்கள் தொடர்பான விளக்கமளித்தல் மற்றும் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களை நடாத்துதல் தொடர்பாகவும், தேர்தல் நடைமுறைகள் தொடர்பாகவும் நீதிமன்றத் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.  அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில தீர்ப்புக்கள் பற்றி இங்கு குறிப்பிடுகின்றோம்.

 

  • ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 17 සහ 126 වන ව්‍යවස්ථා යටතේ සහ එම ව්‍යවස්ථා ප්‍රකාර වූ ඉල්ලීම පිළිබඳ වූ කාරණය

ඉල්ලීම් අංකය (SC FR 35/2016)

  1. வாக்குரிமை என்பது அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும்.

வாக்களித்தல் என்பதே, ஒருவரது கருத்துத் தெரிவிக்கும் உரிமை என அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அரசியல் மேடைகளிலோ அல்லது வேறு வகையிலோ கருத்துக்களை வெளிப்படுத்துவது போன்று இரகசியமான முறையில் செய்யப்படுகின்ற வாக்களித்தல் என்னும் செயலும் கருத்துத் தெரிவிக்கும் அடிப்படை உரிமைகளுள் உள்ளடக்கப்பட்டுள்ளது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(தேசப்பிரிய – கருணாதிலக எ.  தேர்தல் ஆணையாளரும் ஏனைய 13 பேரும்.  (1999-1-SLR-157)

 

  1. ஒவ்வொரு வாக்கும் ஒரு பிரஜையின் கருத்துத் தெரிவிக்கும் உரிமையின் ஒரு பகுதியாகும்.

அரசியல் யாப்பின் 4(உ) விதிமுறையின் பிரகாரம்,  பாராளுமன்றத் தேர்தல், மக்கள் தீர்ப்பு, ஜனாதிபதித் தேர்தல் போன்ற தேர்தல்களில் வாக்குரிமையைப் பிரயோகிப்பதனால் மக்கள் இறைமை பாதுகாக்கப்படுகின்றதென குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மாகாண சபைத் தேர்தல்,  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. (1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட போது மாகாண சபைகள் என்னும் வியூகம் இல்லாதிருந்ததுடன், 1988 ஆம் ஆண்டிலேயே மாகாண சபைகள் நிறுவப்பட்டது என்பதும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.) ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் தமது வாக்குரிமையைப் பிரயோகிப்பதன் மூலம் தமது இறைமை பாதுகாக்கப்படுகின்றதென உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளதுடன், மக்கள் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்களின் போது வாக்களிப்பதுவும், ஒவ்வொரு பிரஜையும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையின் ஒரு பகுதி எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

(எகொடவெல / மெதிவக்க ஏ.திசாநாயக்க – (2001-1-SLR-177)

 

  1. சுதந்திரமான போக்குவரத்திற்கு இடமளியாமையும், வாக்களிப்பதற்குச் செல்வதைத் தடுத்தமையும் - அடிப்படை உரிமை மீறலாகும்.)

2002 ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் சிலர் வாக்களிப்பதற்காக மட்டக்களப்பிலிருந்து தமது வாக்களிப்பு நிலையம் அமைந்துள்ள பிரதேசத்திற்குச் சென்று கொண்டிருந்த பொழுது, பாதுகாப்புப் படையினர் அதற்கு இடமளிக்கவில்லை.  எனவே இவர்களுள் மூவர், தமது சுதந்திரமான போக்குவரத்திற்குத் தடங்கலை ஏற்படுத்தியமையும், வாக்களிப்பதற்கு இடமளிக்காமையும் அரசியல் யாப்பின் 14(1)(இ) மற்றும் 14(1)(எ) பிரிவின் பிரகாரம் உரிமை மீறல்களாகும் என உயர்நீதி மன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  இந்த முறைப்பாட்டினை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், பாதுகாப்புப் படையினரின் இந்தச் செயல் மூலம் அரசியல் யாப்பின் 14(1)(அ) பிரிவின் பிரகாரம் கருத்துத் தெரிவிக்கும் உரிமைகள் மீறப்பட்டுள்ளது எனத்  தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் பிரகாரம், முறைப்பாட்டாளர் மூவருக்கும் அரசாங்கத்தினால் முறையே ஒரு லட்சம் ரூபா பணத்தொகையும், இராணுவத் தளபதியினால் ரூபா 30,000 பணத்தொகையும் செலுத்த வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் ஆணையாளருக்கும் ரூபா 1000 செலுத்த வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

(சோதிலிங்கம் நவனந்தன் ஏ. தயானந்த திசாநாயக்க மற்றும் கணபதிப்பிள்ளை ஏ. தயானந்த திசாநாயக்க மற்றும் ஏனையவர்கள் - SC FR-25-26/2002)

 

  1. தேர்தல் மனுவானது வழக்குத் தொடரப்பட்ட தரப்பினருக்கு மாத்திரமன்றி குறித்த வட்டாரத்தின் பிரஜைகளினது உரிமையாகவும் அமையும். இது முழு நாட்டினையும் பாதிக்கக்கூடிய பொது விடயமாகும்.

(சரவணமுத்து எ. த மெல் என்பவரது வழக்கு விசேடமான எடுத்துக்காட்டு. ரம்புக்வெல்ல ஏ. சில்வா – (1924-26 NCR-253-254)  வழக்கின் போது பர்ட்ரம் நீதியரசர் வழங்கிய தீர்ப்பும், வெளிப்படுத்துகையும்)

 

  1. நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்கள் மீறப்படுதல் தொடர்பான பிரச்சினையானது, தேர்தல் மனுக்களைச் சமர்ப்பிக்கும் மனுதாரர் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆகியோருக்கிடையிலான பிரச்சினை மாத்திரமன்றி, வாக்கெடுப்பு மாவட்டமொன்றின் பொதுநலன் தொடர்பான பிரச்சினையும் ஆகும்.

புத்தள வாக்கெடுப்பு மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் மனு வாபஸ் பெறப்படுவதற்கு இடமளிக்காது வழங்கப்பட்ட தீர்ப்பு.

(அலெக்சாண்டர் ஏ. லியோ பிரனாந்து – 1949-NLR -202)

 

  1. ஒரு தேர்தலின் போது அபேட்சகர் ஒருவருக்கும் அவரது முகவர் ஒருவருக்கும் இடையிலான தொடர்பானது, ஒரு நிறுவனத் தலைவருக்கும், ஊழியருக்கும் இடையிலான தொடர்பிற்குச் சமமானது என வழங்கப்பட்ட தீர்ப்பு.

(S.J.Y.Chelvanayagam V.SNatesan – 1956 NLR 271)