தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

சிறப்பு வாக்காளர்கள் (வலதுகுறைந்தோர் மற்றும் விசேட தேவைகள்)

 

பார்வையுள்ளவர்களும் வாக்குச்சீட்டை அடையாளமிடுவதற்கான ஆற்றலுள்ளவர்களுமாக உள்ள போதிலும் வாக்களிப்பு முறை பற்றிய அறிவில்லாத ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தின் சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலர் அல்லது அவர் சார்பாக வேறோர் அலுவலர் வாக்குச்சீட்டொன்றை அடையாளமிடும் விதத்தை மாத்திரம் விளக்குவார். எனினும் பார்வைக் குறைபாடு காரணமாகவோ, உடலியல் குறைபாடு காரணமாகவோ வாக்குச்சீட்டை தனது கையால் அடையாளமிடமுடியாத ஒருவருக்கு தனது உதவிக்காக வேறொருவரை அழைத்து வர முடியும். இத்தகைய வாக்காளர்கள் கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அரசாங்க வைத்தியரொருவர் அத்தாட்சிப்படுத்திய சான்றிதழொன்றை எடுத்துவரல் வேண்டும். முறையாக ஆளடையாளத்தை நிரூபித்துக் கொண்டதன் பின்னர் வாக்காளரின் உதவியாளராக சிரேட்ட தலைமைதாங்கும் அலுவலர் மற்றும் தேர்தல் பணியாட் குழுவின் மேலுமொரு அங்கத்தவர் ஒருவரின் முன்னிலையில் வாக்களிப்புச் சிற்றறைக்குள் வாக்கினை அடையாளமிடமுடியும். எனினும் பார்வைக் குறைபாடுடைய வாக்காளர் ஒருவர் மற்றொருவரை உடன் அழைத்துவராவிடத்து சட்டத்தில் குறிப்பிடப்படாதுள்ள போதும் இதற்கு முன்னர் தேர்தல்களில் மேற்கொள்ளப்பட்டவாறு சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் மற்றோர் அலுவலருடன் வாக்காளரை வாக்களிப்புச் சிற்றறைக்குள் அழைத்துச் சென்று அவரிடம் விடயங்களை வினவி சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலர் வாக்காளர் கோருகின்றவாறு அடுத்த அலுவலரின் முன்னிலையில் வாக்கினை அடையாளமிட்டுக் கொடுப்பார்.