தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

அடிக்கடி கேட்க்கப்படும் வினாக்கள் - தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக

இலங்கை அரசியல் யாப்பின் IXV ஆம் அத்தியாயத்தின் 103-104 அம் உறுப்புரைகளுக்கமைய ஏதேனும் உயர்தொழிலில் அல்லது நிருவாகம் அல்லது கல்விசார் துறைகளில் தமக்கென சிறந்த நிலையை ஏற்படுத்திக் கொண்ட ஆட்களிடையேயிருந்து, அரசியலமைப்பு பேரவையின் விதப்புரையின் மீது, சனாதிபதியால் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்களில் ஒருவர் பிரதி தேர்தல்கள் ஆணையாளராக அல்லது அதற்கு மேற்பட்ட பதவியை வகித்தவரான தேர்தல்கள் திணைக்களத்தின் ஓய்வு பெற்ற அலுவலர் ஒருவராக இருத்தல் வேண்டும். இவர்கள் பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டுக் காலப்பகுதியொன்றுக்குப் பதவி வகித்தல் வேண்டும்

அரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையின் மீது அந்த உறுப்பினர்களிலிருந்து ஒருவர்  அதன் தவிசாளராக சனாதிபதி அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

(i)   ஆளெவரும், பாராளுமன்றத்தின், மாகாணசபையொன்றின் அல்லது உள்ளூரதிகார சபையொன்றின் உறுப்பினரொருவராகவிருப்பின் அல்லது தெரிவு செய்யப்படின் அல்லது,

(ii)  நீதித்துறை அலுவலரொருவராகவிருப்பின் அல்லது பகிரங்க அலுவலரொருவராகவிருப்பின் அல்லது நியமிக்கப்படின் அல்லது,

(iii) எத்தகையதுமான ஏதேனும் பதவியில் அரசின் ஊழியத்திலிருப்பின் அல்லது அரச ஊழியத்தை மேற்கொள்ளின் அல்லது

(iv)  உயர்நீதிமன்றத்தின் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளைப் பதவியிலிருந்து அகற்றுதல் தொடர்பான அரசியலமைப்பினதும் வேறு சட்டத்தினதும் ஏற்பாடுகள், ஆணைக்குழுவின் உறுப்பினரொருவரைப் பதவியிலிருந்து அகற்றுதல் முடியும்.

(v)   ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினர், சனாதிபதிக்கு முகவரியிட்டனுப்பப்படும் எழுத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட முடியும்.

(vi)  ஒழுக்கக்கேட்டை உட்படுத்துகின்ற ஏதேனும் தவறுக்கு நீதிமன்றமொன்றினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டால் அல்லது அவர்மீது குடியியற்றகுதியீனம் விதிப்பதற்கான தீர்மானமொன்று இவ்வுறுப்புரையின் (8) ஆம் பிரிவின் கீழ் நிறைவேற்றப்பட்டிருந்தால் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட முடியும்.

(vii) ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் ஆணைக்குழுவின் முன்கூட்டிய அனுமதியைப் பெறாமல் ஆணைக்குழுவின் அடுத்தடுத்த மூன்று கூட்டங்களுக்கு வருகைதராதவிடத்து, அத்தகைய கூட்டங்களுள் மூன்றாவது கூட்டத் தேதியிலிருந்து பதவியை வறிதாக்கியுள்ளாரெனக் கருதப்படுதல் வேண்டும்.

(i)   தகைமையுடைய அனைத்து பிரசைகளுக்கும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடாத்தப்படுகின்ற தேர்தல்களின் போது அச்சமின்றியும் சுதந்திரமாகவும் நம்பிக்கையோடும் தமது வாக்குகளை அளிப்பதற்கு வசதிகளைச் செய்தல்.

(ii)  வாக்கைப் பிரயோகித்தல் தமக்குரிய பராதீனப்படுத்த முடியாத ஓர் உரிமையெனவும், தாம் தேர்தல் செயற்பாடுகளினுள் தொழிற்பாட்டு ரீதியாக பங்கேற்கின்றனர் என்பதை புரிந்து கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையெடுத்தல்.

(iii) தேர்தல் காலப்பகுதியினுள் அனைத்து தேர்தல் வேட்பாளர்களுக்கும் சமமானதும் நியாயமானதுமான சந்தர்ப்பங்கள் கிடைக்கக்கூடியவாறு செயற்படுவதற்கு நடவடிக்கையெடுத்தல்.

(iv)  ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னர் தகைமையுடைய அனைத்து பிரசைகளும் உள்ளடக்கப்பட்ட நிகழ்நிலைப்படுத்தப்பட்ட தேருநர் இடாப்பொன்றைத் தயாரித்தல்.

(v)   சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழ்கின்ற அனைத்து பிரசைகளும் விசுவாசமாகவும் போதிய அளவிலும் தேர்தல் செயன்முறைகளில் பங்குக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையெடுத்தல்.

(vi)  தேர்தல் செயன்முறையைத் திறமையாகவும் வெளிக்காட்டுத் தன்மையுடன் கூடியதாகவும் நிருவாகம் செய்தல்.

(vii) தேர்தல் செயன்முறையோடும், தேர்தல் ஆணைக்குழுவோடும் தொடர்புடைய புள்ளிவிபரங்களையும் மற்றும் உரிய தகவல்களையும் அனைத்து தரப்பினர்களுக்கும் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை காலத்திற்குப் பொருத்தமான விதத்திலும் போதுமான அளவிலும் செய்து கொடுத்தல்.