தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

நான் எவ்வாறு பதிவு செய்வது

வாக்காளர் இடாப்பில் வாக்காளரொருவராகப் பதியப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும் சனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மக்கள் தீர்ப்பு ஆகியவற்றின் போது வாக்களிப்பதற்குத் தகைமை பெற்றுள்ளனர். இதற்கிணங்க மக்கள் இறைமையின் கீழ் கொள்ளப்படுவது வாக்குரிமை அனைத்து பிரசைகளுக்கும் உரித்துடையதெனினும் அதனைப் பிரயோகிக்க முடிவது அவரின் பெயர் தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்பட்டிருந்தால் மாத்திரமேயாகும்.

வாக்காளர்களைப் பதிதல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை நடாத்துவதற்குரிய சட்டங்களை தயாரித்து 1946 ஆம் ஆண்டு இலங்கை (பாராளுமன்றத் தேர்தல்) அரச பேரவைக் கட்டளைச் சட்டம் 1946 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 26 ஆம் திகதி செயல்வலுப்படுத்தப்பட்டது. தேருநர்களைப் பதிவதற்கான அடிப்படை தகைமை 1946 இலங்கை (பாராளுமன்றத் தேர்தல்) அரச பேரவைக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் காட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 01 ஆம் திகதிக்கு 21 வயதிற்கு மேற்பட்டமை தவிர்ந்த ஏனைய தகைமைகள் சமகாலத்தில் நடைமுறையிலுள்ளவாறாகும். ஆரம்பத்தில் தேருநர்களைப் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்காகவும் உள்நாட்டு அலுவல்களுக்குப் பொறுப்பான அமைச்சரினால் பெயர் குறித்து அல்லது பதவியடிப்படையில் பதிவு அலுவலர்கள் மற்றும் மீளாய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு உதவுவதற்காக காலத்திற்கு காலம் நபரொருவர் அல்லது அதைவிட அதிகமானோர் பெயர் குறித்து அல்லது பதவி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.

1954 ஆம் ஆண்டின் முதல் தடவையாக வரிப் பண இலக்கம், உணவுக் கட்டுப்பாட்டு இலக்கம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதோடு ஒவ்வொரு வீட்டிற்காகவும் தனித்தனியான படிவம் அல்லது படிவங்கள் பயன்படுத்தப்பட்டன. 1957ஆம் ஆண்டில் நகரப் பிரதேசங்களில் கணக்கெடுப்பதற்காகப் படிவமொன்று அறிமுகம் செய்யப்பட்டதோடு, அதில் வீட்டுத் தலைவர் கையொப்பமிடுவதும் உட்சேர்க்கப்பட்டிருந்தது.

1959 ஆம் ஆண்டு தேருநர்களின் தகைமை தொடர்பான முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட வருடமாகும். 1959 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க திருத்தச் சட்டத்திற்கமைய அது வரையும் 21 வயதாகவிருந்த வாக்காளரொருவராவதற்கான தகைமை 18 வயது வரை குறைக்கப்பட்டது.

1959 ஆம் ஆண்டு மே மாதம் அத்தாட்சிப்படுத்தப்பட்ட தேருநர் இடாப்பிலிருந்து தேருநர் இடாப்பு வீட்டிலக்க தொடரொழுங்கில் தயாரிப்பது ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே இம்முறை கொழும்பு மற்றும் கண்டி நகர சபை பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, ஏனைய பிரதேசங்களில் வாக்காளர்களின் பெயர்கள் அகர வரிசை ஒழுங்கில் தேருநர் இடாப்புத் தயாரிக்கப்பட்டது.

தேருநர் கணக்கெடுப்பு அலுவல்கள் 1962 ஆம் ஆண்டு வரை கிராம தலைவர்கள் மற்றும் நகர பிரதேசங்களில் விஷேட கணக்கெடுப்பு அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டதோடு, 1963 ஆம் ஆண்டு கிராம சேவகர் சேவை உருவாக்கப்பட்டதன் பின்னர் கிராம சேவகர்களினால் (கிராம அலுவலர் அச்சந்தர்ப்பத்தில் அழைக்கப்பட்டது அவ்வாறாகும்.) மேற்கொள்ளப்பட்டது.

1967 ஆம் ஆண்டின் மீளாய்வின் விஷேட அம்சம் யாதெனில், நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் வாக்காளர் கணக்கெடுப்புக்காக முதற் தடவையாக விஷேட படிவமொன்று அறிமுகம் செய்யப்பட்டமையாகும். வீட்டுத் தலைவர் குறித்த விபரங்களை வழங்கி கையொப்பமிடுவதும் கணக்கெடுப்பு அலுவலர் அவற்றை பரிசீலித்து பரிந்துரைத்து குறிப்புக்களையிட்டு கையொப்பமிடுவதும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இப்படிவம் "Body Count" என்ற ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துக்கள் இரண்டையும் பயன்படுத்தி "பிசீ" படிவம் (BC Form) என அழைக்கப்பட்டது.

தோட்ட பிரதேசங்களில் வாக்காளர் கணக்கெடுப்பு தோட்ட அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்பட்டதோடு, 1969 ஆம் ஆண்டில் முதற் தடவையாக அவை கிராம சேவை சேவகரினால் பரிசீலிக்கப்பட்டதோடு, 1980 ஆம் ஆண்டின் மீளாய்விலிருந்து தோட்டப் பிரதேசங்களின் கணக்கெடுப்பு கிராம சேவை சேவகரினால் (கிராம அலுவலர் அச்சந்தர்ப்பத்தில் அழைக்கப்பட்டது அவ்வாறாகும்.) மேற்கொள்ளப்பட்டது.

1969 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்ட தேருநர் இடாப்பு 1970 ஆம் ஆண்டிலிருந்து சிங்களம் மற்றும் தமிழ்  ஆகிய மொழிகளில் தயாரிப்பது ஆரம்பிக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டிலிருந்து அனைத்து அரசியற் கட்சிகளுக்கும் வாக்கெடுப்பு மாவட்ட மட்டத்தில் வாக்காளர் கணக்கெடுப்பை கண்காணிப்பதற்காக முகவர்களை நியமனம் செய்வதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 101 ஆம் உறுப்புரையின் பிரகாரம் வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு 1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களைப் பதிதல் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

1. இலங்கை பிரசையொருவராகவிருத்தல்.

2. குறித்த தேருநர் இடாப்பில் பதிவதற்காக தகைமைபெறும் தினமான பிப்ரவரி மாதம் 01 ஆம் திகதிக்கு 18 வயது பூர்த்தியடைந்திருத்தல்.

3. குறித்த முகவரியில் சாதாரண வதிவைக் கொண்டிருத்தல்.

4. அரசியலமைப்பின் 89 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமையீனங்களுக்கு பிப்ரவரி மாதம் 01 ஆம் திகதியாகும் போது உட்படாத ஒருவராகவிருத்தல் (செயல்வலுவிலுள்ள ஏதேனும் சட்டமொன்றின் கீழ் சித்தசுவாதீனமற்ற ஒருவராக இல்லாதிருத்தல். கடந்த ஏழு வருட காலத்தினுள் நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டு விதிக்கப்பட்ட 06 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமொன்று சிறைத்தண்டனை அனுபவித்த அல்லது அனுபவித்து வருகின்ற நபரொருவராக இல்லாதிருத்தல் தேர்தல் சட்டங்களுக்குரிய தவறுகளுக்குக் குற்றவாளியொருவராக இல்லாதிருத்தல்.)