தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

 

தேர்தல் ஆணைக்குழுவை நிறுவும் பொருட்டு குறித்த நியதிச் சட்ட சபை மூலம் தகைமையுடைய அங்கத்தவர்களின் பெயர்கள் தொடர்பாக மாண்புமிகு ஜனாதிபதி அவர்களிடம் பரிந்துரை செய்யப்பட்டு, அதன் பிரகாரம் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆந் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. 

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச கூற்றுக்கு அமைவாக, ஒரு நாட்டின் பொது மக்கள் தமது நாட்டின் நிருவாகச் சுழற்சியில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பங்களை வழங்கும் நோக்குடன் செயற்பட ஆரம்பித்த தேர்தல்கள் ஆணைக்குழுவானது, இக்கருத்தினை அடிப்படையாக வைத்து தனது நோக்கம், பணிக்கூற்று, எதிர்பார்ப்புக்கள், இலட்சியங்கள் என்பன நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளது என்பதையும், நான்கு வருடங்களுக்கான செயற்பாட்டுத் திட்டங்களை வகுப்பதும், அதற்கு முன்னுரிமை வழங்குவதும் அத்தியாவசியமானது என்பதையும் அறிந்து கொண்டது.  கடந்த மூன்று தசாப்த காலமாக இடம் பெற்றுள்ள சமூக, அரசியல், கலாச்சார மாற்றங்கள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கான ஒன்றிணைந்த வழிமுறைகளும், நோக்கமும் அத்தியாவசியம் என்பதைப் புரிந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழு பங்களிப்பு மூலோபாயத் திட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானித்தது.  தகவல்கள், அபிப்பிராயங்கள், பிரேரணைகள், விமர்சனங்கள் என்பனவற்றை பிரதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் சேகரிக்கப்பட்டு, அவற்றைப் பகுப்பாய்வு செய்த பின்னர் தயாரிக்கப்பட்ட செயன்முறைத் திட்டம் இதுவாக அமையலாம் என்பதனால், இது ஒரு விசேடமான, அடிப்படையான நடவடிக்கைகளின் பெறுபேறாகப் பெற்றுக் கொண்ட சிறந்த திட்டமாக அமைந்துள்ளது.

நீண்டகால யுத்தங்கள் காரணமாக மாற்றமடைந்த அரசியல் நிலைப்பாடுகளும், சமூக மற்றும் அரசியல் மீள்நிர்மாணங்களுக்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்ட சுற்றாடலும், உள்ளக மற்றும் வெளிச் சுற்றாடலின் தன்மைகளைக் கருத்திற் கொண்டு தனது பணிகளைப் பயனுள்ள வகையிலும், செயற்றிறனுடனும் நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் ஆணைக்குழுவின் பரந்தளவிலான செயற்பாடுகள் வலுப்பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட்டன.

பங்களிப்பு மூலோபாயத் திட்டத்தின் செயற்பாடுகள் பயனுள்ள முகாமைத்துவத்திற்கான புதிய அனுபவமாக அமைந்திருந்தது. இந்த நிறுவனத்தினைப் பரந்தளவான முறையில் வியாபகப்படுத்துவதன் நோக்கத்துடனும், சிறந்த எதிர்கால முகாமைத்திட்டங்களை வகுப்பதன் நோக்கத்துடனும் மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கொள்கைத் திட்டங்கள் என்பன தயாரிக்கப்பட்டு வந்தன. இதன் பிரகாரம் நான்கு வருடங்களுக்கான செயன்முறைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, சகல மட்டத்திலுமான அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களுக்கு மேற்படி திட்டம் தொடர்பாக மிக ஆழமான, தனித்துவமான அர்ப்பணிப்புடன் பணி புரிவதற்கான உணர்வினை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழு தனது நோக்கம், பணிக்கூற்று, இலக்கு என்பவற்றைத் தயாரிப்பதில் மேற்படி திட்டத்தின் செயற்பாடுகள் உட்புகுத்தப்பட்டுள்ளன.  தேர்தல்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சகல ஊழியர்களும் கலந்தாலோசனைகள் மேசையில் அமர்வதற்கும், தமது கருத்துக்களை முன்வைப்பதற்குமான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடாத்தப்பட்டுள்ள செயலமர்வுகளின் போது ஊழியர்களால் இனங்காணப்பட்ட செயன்முறை இலக்குகளை அடைவதற்கான சக்தியை வழங்கியூள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் நோக்கத்தினை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்தப் பங்களிப்புச் செயற்றிட்டம் பேருதவியாக விளங்கியது.

தற்போதைய நடைமுறை மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, கருத்து முரண்பாடுகள், சிக்கல்கள் யாவும் குறைக்கப்பட்டு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை  இனங்காண்பதற்கும்,  தடங்கல்களை இனங்காண்பதற்கும், மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய சந்தர்ப்பங்களை இனங்காண்பதற்கும் இந்த பங்களிப்பு மூலோபாயத் திட்டம் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.  பங்களிப்பு மூலோபாயத் திட்டத் தயாரிப்பின் போது மிகத் தீவிரமான சிக்கல்கள் தொடர்பான அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்யவூம்