தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

எவ்வாறு அரசியற் கட்சி ஒன்றை பதிவு செய்வது?

தேர்தல் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றாகக் கணிக்கப்படுவதற்கு தகைமை பெறுவது எவ்வாறு?

 

விண்ணப்பப் படிவங்களைக் கோருதல்

தேர்தல் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றாகக் கணிக்கப்படுவது 2009 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தினால் திருத்தியமைக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவாகும்.

அதற்கமைய,

ஒவ்வொரு வருடமும் ( சட்டத்தினால் வேறு விதமொன்றில் விதிக்கப்படவில்லையெனில்) சனவரி  மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் விண்ணப்பப் படிவங்கள் கோரப்பட்டு பகிரங்க அறிவித்தல் பத்திரிகைகளில் வெளியிடப்படும். இருப்பினும் சனவரி மாதத்தினுள் பிரகடனம்செய்யப்பட்டிருப்பின்  அவ்வறிவித்தல் வாக்கெடுப்பு தினத்திலிருந்து முப்பது (30) நாட்கள் காலப்பகுதி கடந்த பின்னர் வௌியிடப்படும்.

அரசியற் கட்சியொன்றாகக் கணிக்கப்படுவதற்கான விண்ணப்பம் குறித்த கட்சியின் செயலாளரினால் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய எழுத்தாவணங்கள் யாவை?

  1. 1
    கட்சி யாப்பின் பிரதி
  2. 2
    கட்சியின் பதவி தாங்குநர்களின் பெயர்ப்பட்டியல் (கட்சியின் பதவி தாங்குநர் பட்டியலில், குறைந்தளவு பெண் அலுவலர் ஒருவரையேனும் உள்ளடக்குவதில் கவனம் ஈர்க்கப்படல் வேண்டும்)
  3. 3
    கணக்காய்வாளரொருவரால் கணக்காய்வு செய்யப்பட்ட கட்சியின் வருடாந்த கணக்கறிக்கை
  4. 4
    கட்சியின் சமகாலக் கொள்கைக் கூற்று.
  5. 5
    அரசியற் கட்சியொன்றாகத் தொடர்ந்து செயற்பட்டதென்பதை உறுதிப்படுத்துவதற்காகச் சமர்ப்பிக்கப்படக் கூடிய அனைத்து எழுத்தாவணங்கள் மற்றும் அது தொடர்பான அறிக்கைகள் என்பன.
மேலதிகத் தகவல்களுக்காக உரிய சட்டத்தின் ஏற்பாடுகளை வாசித்தறிந்து கொள்வது உசிதமாகும்.