தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

மாணவர் பாராளுமன்றம்

இடைநிலை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களை சனநாயகம் மற்றும் சர்வசன வாக்குரிமை ஆகிய விடயங்கள் தொடர்பாக அறிவுறுத்துவது காலத்தின் தேவைப்பாடொன்றென ஆணைக்குழுவிற்கு தெரியவந்தமையால் அது தொடர்பாக நடைமுறைப்படுத்துவற்காக ஆணைக்குழுவின் 2017/2020 நான்காண்டு மூலோபாயத் திட்டத்தில் அந்நிகழ்ச்சித் திட்டம் உட்சேர்க்கப்பட்டு கல்வி அமைச்சின் உதவியோடு இடைநிலை பாடாசலைகளில் "குடியுரிமைக் கல்வி வட்டம்" தாபிக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் பூர்வாங்க அலுவல்கள் ஆரம்பிக்கப்பட்டதோடு, இது தொடர்பில் 2016 யூலை மாதம் கல்வி அமைச்சில் அதன் செயலாளர் உள்ளிட்ட சிரேட்ட அலுவலர்களோடு கலந்துரையாடப்பட்ட பின்னர் "குடியுரிமைக் கல்வி வட்டம்" தாபிப்பதற்குப் பதிலாக கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கமைய ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ள "மாணவர் பாராளுமன்றம" நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்தும் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அம்மாணவர் பாராளுமன்றத்தைத் தாபித்தல் தொடர்பான சுற்றுநிருபத்தில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு சனநாயகம் அதன் முக்கியத்துவம் வாக்குரிமை வாக்களிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் மாணவர்களை அறிவுறுத்த முடியுமென தெரியவருவதால் தேர்தல் ஆணைக்குழுவினால் அந்த "மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு" பங்களிப்பு வழங்க நடவடிக்ககையெடுக்கப்பட்டது.

அதன் முதற்கட்டமாக பரீட்சார்த்த கருத்திட்டத்தின் மூலம் கண்டி மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டம் ஆகியவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவ மாணவியர்களுக்கு சனநாயகம் மற்றும் சர்வசன வாக்குரிமை தொடர்பாக அறிவுறுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கங்கள்

  1. *
    சனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு தொடர்பான பரந்த புரிந்துணர்வை வழங்குதல்
  2. *
    தேசிய கல்வி பொது நோக்கங்கள் மற்றும் பொது தேர்ச்சிகளை அடைந்து கொள்வதற்கு தொழிற்பாட்டு சந்தர்ப்பங்களை வகுத்தல்
  3. *
    கற்றறிந்த பாடங்கள் மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் அறிக்கை பரிந்துரைகளுக்கமைய அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய நிகழ்சித் திட்டமொன்றை பாடசாலை கட்டமைப்பினுள் நடைமுறைப்படுத்தல்.
  4. *
    பிரதேச மற்றும் தேசிய அபிவிருத்தி நோக்கங்களை மையமாகக் கொண்டு தேசத்தை கட்டியெழுப்பும பணிகளுக்கு மாணவர்களை நேரடியாக பங்கு கொள்ளச் செய்தல்
  5. *
    பாடசாலை பிள்ளைகளின் தலைமைத்துவத் திறன்களை விருத்தி செய்தல்.
  6. *
    குடியுரிமைக் கல்வி விடயத்தின் மூலம் நியாயமாகவும் செயன்முறை அடிப்படையிலும் பாடசாலை சமூகத்தினுள் விருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற தேர்ச்சிகளை மிகவும் பயனுள்ளதாகவும், தொழிற்பாட்டு ரீதியாகவும் மேற்கொள்ளல்.

இங்கு சனநயாகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள் அவற்றின் பயன்பாடு தொடர்பாக கீழே காட்டப்பட்டுள்ள பணிகளுக்காக தேர்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டது.

  • 1
    சனநயாகம் மற்றும் சர்வஜன வாக்குரிமை தொடர்பாக அறிவுறுத்துதல்.
  • 2
    பாடசாலை மாணவர் பாராளுமன்றத்திற்கு மாணவ பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.
  • *
    வேட்புமனுக் கோரல்
  • *
    வாக்கெடுப்பை நடாத்துல்
  • *
    வாக்குகளை எண்ணலும், மாணவ பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தலும்
  • இதன் மூலம் ஜனநாயகம் தொடர்பான அபிப்பிராயங்கள் மற்றும் அனுபவங்களை புதிய சமுதாயத்தினர் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறும்.