தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

சுற்றுலா விடுதி – நுவரெலியா


01:1 சுற்றுலா விடுதியை ஒதுக்கிக் கொள்வதற்குத் தேவையான தினத்திற்கு மூன்று கிழமைகளுக்கு முன்னர் தேர்தல்கள் செயலகத்தின் நிர்வாக அலுவலரிடம் வினவியதன் பின்னர் குறித்த விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி சமர்ப்பித்து உரிய கட்டணத்தைச் செலுத்தி, சுற்றுலா விடுதியை ஒதுக்கிக் கொள்ள முடியும். நிர்வாக அலுவலரின் தொலைபேசி இலக்கங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன

011-2868441-3 (அலுவலகத்தின் பொது இல.) - நீட்டிப்பு 459

011-2074599 (கடமை)

01:2 சுற்றுலாத்துறை விடுதியை ஒதுக்கிக் கொள்வதற்காக நீங்கள் பணம் செலுத்திய பற்றுச் சீட்டின் போட்டோ பிரதியொன்றை இணைப்பு I இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென்பதோடு, அந்த விண்ணப்பத்தை தலைமை அலுவலகத்திற்கு வந்து கையளிப்பதனூடாக அல்லது 011-2868450 எனும் பெக்ஸ் இலக்கத்திற்கு அனுப்புவதனூடாகவோ மேற்கொள்ள முடியும்

01:3 பெக்ஸ் ஊடாக அனுப்பப்பப்படும் விண்ணப்பம் நிர்வாக அலுவலருக்கு கிடைக்கப்பெற்றதனை உறுதிப்படுத்திக்கொள்ளலானது உங்களுக்கு சுற்றுலா விடுதியை உரிய திகதியன்று ஒதுக்கிக் கொள்வதற்கு வசதியாக இருக்கும்

01:4 உங்களுடைய விண்ணப்பத்திற்கமைய கோரும் திகதி / திகதிகளை சுற்றுலா விடுதியில் தங்குவதற்கான அங்கீகாரத்தை வழங்கும் கடிதத்தின் உங்களுடைய பிரதியை நிர்வாக உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு, அதனை சுற்றுலா விடுதியின் பொறுப்பாளராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலரிடம் சமர்ப்பித்து குறித்த தினங்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்துகொள்ள முடியும்

அறைகளின் எண்ணிக்கை – 02

அறையொன்றில் இருக்க முடியுமான உச்சளவு எண்ணிக்கை - 03

தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலர்கள்/ஊழியர்கள் – ரூ.2,000.00

ஏனைய அரச, பகுதி அரச நிறுவனங்களின் அலுவலர்கள் / ஊழியர்கள் – ரூ. 10,000.00

வாகன ஓட்டுநர்களுக்காக மேலதிக அறை – ரூ. 1,250.00

அமைவிடம் - நுவரெலியாதேர்தல் அலுவலக வளவு

02:1 மொத்த விடுதியை, ஆணைக்குழுவின் பணியாட்குழுவுக்கு மற்றும் ஆணைக்குழுவில் (முன்னைய தேர்தல்கள் திணைக்களம்) குறைந்தது 05 வருடங்கள் பணியாற்றி அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒதுக்கிக் கொள்வதற்காக ஒரு நாளைக்கு ரூ.2,000.00 வும், வெளித்தரப்பினருக்கு ரூ.4,000.00 என அறவிடப்படல் வேண்டும்

02:2 கட்டில்கள், தலையணைகள், கட்டில் விரிப்புக்கள், தலையணை உறைகள் மற்றும் லினன் போர்வை (Blanket) ஆகியனவும் வழங்கப்படும். இவற்றை சுத்திகரிப்பதற்கான கட்டணம் சுற்றுலா விடுதிக்கான கட்டணத்திற்குள் உள்ளடக்கப்படுவதில்லை. எனவே சுத்திகரிப்புக் கட்டணமாக பயன்படுத்திய பொருட்களுக்காக ஒரு அறைக்கு ரூ.1,500.00 தொகையை சுற்றுலா விடுதியின் பொறுப்பாளருக்குச் செலுத்தல் வேண்டும்

02:3 இந்த சுற்றுலா விடுதியில் தங்குபவர்களுக்கு உணவு பானங்களை தயாரித்துக்கொள்வதற்குத் தேவைப்படும் சமயலறை உபகரணங்கள், குளிர்சாதனப் பெட்டி, எரிவாயு அடுப்புக்கள் உட்பட்ட அனைத்து உபகரணங்களும் வழங்கப்படுவதுடன், அதற்கான எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்காக ஒரு அலகிற்கு ரூ. 50.00 வீதமும் எரிவாயு பயன்பாட்டிற்காக ஒரு நாளைக்கு ரூ. 250.00 வீதம் சுற்றுலா விடுதியின் பொறுப்பாளருக்குச் செலுத்துதல் வேண்டும்.

02:4 தலைமை அலுவலகம் உட்பட்டநாட்டின் எந்தவொரு தேர்தல் அலுவலகத்தினூடாகவும் பணத்தைச் செலுத்த முடியும்

02:5 இந்த ஆணைக்குழுவின் அல்லது அரசாங்கத்தின் தேவைப்பாட்டின் அடிப்படையில் அல்லது அவசர நிலைமையொன்றின் போது ஒதுக்கீடு இரத்துச் செய்யப்பட்டால் விடுதியை ஒதுக்கீடு செய்து கொள்வதற்காக அறவிடப்பட்ட தொகை மீளச் செலுத்தப்படும்

02:6 நுவரெலியா மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கு கடமை அலுவல்களுக்காக வருகைதரும் ஆணைக்குழுவின் முறையான அனுமதியைப் பெற்றுவரும் அலுவலருக்கு அந்தக் கடமை அலுவல் காரணமாக நுவரெலியா மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் இரவைக் கழிக்க வேண்டியேற்பட்டால் நுவரெலியா சுற்றுலா விடுதியின் பின்புறமாக உட்பிரவேசிக்க முடியுமான அறையை அவருக்கு அறவீடுகளின்றி தங்குவதற்காக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்

03:1 சுற்றுலா விடுதியில் தங்குவதற்காக விண்ணப்பித்து அனுமதிப் பத்திரத்தினூடாக அனுமதியைப் பெற்றுக்கொண்ட அலுவலரே அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஏனையோருடன் தங்குதல் வேண்டுமென்பதோடு, அவர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு தங்குவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஒரு அறையில் அதிகபட்சமாக மூவருக்கு மாத்திரமே தங்குவதற்கு முடியும்

03:2 ஒதுக்கிக் கொள்ளப்பட்ட சுற்றுலா விடுதியைப் பயன்படுத்தாவிடின் அதனை ஒதுக்கிக் கொண்டவர் அதுபற்றி தங்குவதற்கான திகதிக்கு 07 நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் வேண்டும். ஆனாலும் செலுத்திய எந்தவொரு தொகையும் திருப்பிச் செலுத்தப்படமாட்டாது. தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒதுக்கிக் கொள்ளப்பட்ட தினத்தில் சுற்றுலா விடுதியைப் பயன்படுத்தாவிட்டால் மாத்திரம் ஒதுக்கிக் கொள்ளப்பட்ட தினத்தை அல்லது காலப் பகுதிக்குப் பதிலாக குறித்த ஆண்டு முடிவடைவதற்குள் பிறிதொரு தினத்தை அல்லது குறித்த காலப் பகுதியை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்வைத்தால் அது தொடர்பாக கவனத்திற் கொள்ளப்படும்

03:3 அனைத்து ஆண்டுகளிலும் ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் திசெம்பர் மாதங்களுக்கு இந்த சுற்றுலா விடுதியை ஒதுக்கிக் கொள்ளும் போது தேர்தல் ஆணைக்குழுவின் பணியாட்குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

03:4 சுற்றுலா விடுதியை ஒதுக்கிக் கொண்டவர்கள் அவர்கள் சட்டபூர்வமாக அதில் தங்குவதற்கு அனுமதி பெற்றுக் கொண்டுள்ளகாலப் பகுதியினுள் அதன் வளவில் காணப்படும் பொருட்கள், கட்டிடம், கட்டிடத்திற்குள் காணப்படும் அனைத்துப் பொருட்களும் பாதுகாக்கப்படும் வகையில் அதில் தங்கியிருப்பதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளனர். சுற்றுலா விடுதியில் தங்கியிருக்கும் காலப் பகுதியினுள் அந்தக் கட்டிடத்திற்கு, அதன் வளவில் காணப்படும் ஏதேனுமொன்றுக்கு அல்லது கட்டிடத்தில் காணப்படும் ஏதேனுமொன்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டால் தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்துரைக்கப்படும் விதத்தில் அதனை சீர் செய்வதற்கு அதனை ஒதுக்கிக் கொண்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்

03:5 சுற்றுலா விடுதியில் கழிக்கும் காலப் பகுதியில் அதில் தங்கியிருப்பவர்களுக்கு எதிராக ஏதேனுமொரு முறைப்பாடு கிடைக்கப் பெற்றால் இதற்குப் பின்னர் இந்த சுற்றுலா விடுதியை அவர்களுக்கு ஒதுக்குதல் சம்பந்தமாக கவனத்திற் கொள்ளப்படமாட்டாது

03:6 இந்த சுற்றுலா விடுதியில் தங்குவதற்காக ஒதுக்கிக் கொள்ளும் எவரும் அதில் வைபவங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்துதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது

03:7 தங்குபவர்கள் உணவுகளைத் தயாரித்துக் கொள்வதற்காக சமயலறையைப் பயன்படுத்தாவிட்டால் தேவையான உணவுகளை சுற்றுலா விடுதிப் பொறுப்பாளரிடம் தெரிவித்து வெளியிலிருந்து உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும்

03:8 தங்குபவர்களால் மேலே 3.3 மற்றும் 3.4 இன் கீழ் விடுதிப் பொறுப்பாளருக்கு செலுத்தப்படும் கட்டணங்களுக்கா கபற்றுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளுதல் கட்டாயமாகும்

03:9 சுற்றுலா விடுதியை ஒதுக்கிக் கொள்வதற்கானவிண்ணப்பப் படிவத்தில் மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கஅதில் தங்குபவர்கள் எப்போதும் விடுதியில் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொள்வதனை எதிர்பார்ப்பதுடன், அரசாங்கத்தின் சொத்தான இதனை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துதல் அதில் தங்கும் அனைவரதும் பொறுப்பாகும்

04:1 பணம் செலுத்தியதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பத்தின் (அனுமதிப் பத்திரம்) பிரதியொன்றை நுவரெலியா தேர்தல்கள் அலுவலகத்தில் காணப்படும் சுற்றுலா விடுதியை ஒதுக்கிக் கொள்ளும் கோவையில் உள்ளடக்குவதற்காகப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்

04:2 சுற்றுலா விடுதிக் கட்டணத்தைஅரசாங்க வருமானத்திற்கு வரவு வைத்தல் வேண்டும். எரிவாயு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக விடுதிப் பொறுப்பாளருக்குச் செலுத்தப்படும் கட்டணத்தை வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து அந்தக் கணக்கிற்கு வரவு வைத்தல் வேண்டுமென்பதோடு, தேவையான சந்தர்ப்பங்களில் சுற்றுலா விடுதியின் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தக் கணக்கிலுள்ள பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்

04:3 சுற்றுலா விடுதிக்கான வருமானம் மற்றும் செலவுகள் சம்பந்தமாக மூன்று மாதங்களுக்கொருமுறை உள்ளக கணக்காய்வாளர் கணக்காய்வை மேற்கொள்ளுதல் வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவுகள் சம்பந்தமாக அந்தக் கணக்காய்வின் போது கவனம் செலுத்தப்படல் வேண்டும்

04:4 ஏதேனுமொரு காரணத்தின் அடிப்படையில் இந்த சுற்றுலா விடுதி சம்பந்தமாக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியேற்படின் அது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

04:5 இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்கள் சம்பந்தமாக தங்களுடைய பிரிவில் பணியாற்றும் / அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரையும் அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும்.

விண்ணப்பப் படிவம்

பதிவிறக்கம் செய்யவும்